பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

459

தமிழர் வரலாறு


                 ‘’வழியின் நெறியே நால்வகைத் தாகும்.’'
                  ‘’தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து
                    அதர்ப்பட யாத்த லோடு அனைமர பினவே.’'
                                           தொல்.பொருள். மரபு: 87,98,99

ஆக, வழிநூல் என்பது, முதல் நால் பொருளை அடி யொட்டித் தழுவிச் செல்வதே அன்றி, அதுகூறும் எப் பொருளையும் மறுத்துக் கூறுவது அன்று. திருவள்ளுவர். தம்காலத்தில் வழக்கில் இருந்த தாம் கற்ற நூல்களில் கூறப்பட்டிருக்குக்கும் ஏற்புடைய கருத்துக்கள் பலவற்றைத் தம் திருக்குறளில் பல இடங்களில் எடுத்தாண்டுள்ளார் என்பது உண்மை,

எவன், மற்றொன்றின் மாமிசத்தினாலே, தன் மாமிசத்தை விர்த்தி செய்ய நினைக்கிறானோ, அவனினும் பாவி, இந்த உலகத்தில் ஒருவனும் இல்லை. மனுதர்ம சாஸ்திரம், அதிகாரம் ஐந்தில், கூறப்பட்டிருக்கும் கருத்து, தமக்கு ஏற்புடையதாகவே, அக்கருத்தைத் , தம்முடைய, தன்னூ பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்டான் எங்ஙனம் ஆளும் அருள்'’ (251) எனும் குறளில் கொண்டார்.

“எவன் ஐந்துக்களைக் கட்டாமலும், கொல்லாமலும் வருத்தப்படுத்தாமலும் இருக்கிறானோ, அவன் சர்வஜன மித்ரனாகச், சகல சுகத்தையும் அனுபவிக்கிறான்’ என்ற மனுதர்மசாஸ்திரக் கருத்தை (அதிகாரம் 5) தம்முடைய கொல்லான், புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் (260) என்ற குறளில் கொண்டார்.

‘'அரசன் அடையப்படாத பொருளைச் சம்பாதிக்க விரும்பவேண்டும்; சம்பாதித்த பொருளை முயற்சியோடு காப்பாற்றவேண்டும் காப்பாற்றிய பொருளை விருத்தி செய்ய வேண்டும்; விருத்தி செய்த பொருளைச் சற்பாத்திரத்தில் செலவு செய்ய வேண்டும்’ என்ற மனுதர்மசாஸ்திரப் பொருளைத் (அதிகாரம் :7) தம்முடைய ” இயற்றலும்