பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

454

தமிழர் வரலாறு

real or mythical sway outside the Tamil Nadu, he carved his emblem on the top of the Himalayas ; thus karikal incised there his tiger, Nedunjeral, his bow, and an unnamad Pandian his carp (page , 505) என எள்ளி நகையாடி விட்டுப் பின்வரும் சிலப்பதிகார வரிகளை எடுத்தாண்டுள்ளார்.

“கயல் எழுதிய இமய நெற்றியின்
அயல் எழுதிய புலியும் வில்லும்
நாவலந் தண்பொழில் மன்னர்
ஏவல் கேட்பப் பார்அர சாண்ட

மாலை வெண்குடைப் பாண்டியன்”
—சிலம்பு : காதை : 17 : 1—5.

மூவேந்தர்களின் இமயப் படையெடுப்பு குறித்து, இவ்வாறு எள்ளி நகையாடும் திருவாளர் பி. டி. எஸ். அவர்கள் அம்மூவேந்தர் ஒவ்வொருவர் குறித்தும் கூறுவனபற்றி இனிக் காண்பாம்.

கரிகாலன், இமயம் வெற்றி கொண்டது:

முதற்கண், கரிகாலனின் இமயவெற்றி குறித்த ஆய்வினை மேற்கொண்ட திருவாளர் அய்யங்கார் அவர்கள், சிலப்பதிகாரம் இந்திர விழவூரெடுத்த காதையில், பரந்த இப்பேருலகில், தன்னோடு எதிர்த்துப் போரிடும் அரசர் எவரும், இலராகவே, போர் ஆர்வம் மிக்க திருமாவளவன், வாள், குடை, மயிர் நீக்காத் தோல் போர்த்த முரசுகளோடு நல்ல நாளில், தலைநகர் நீங்கி, வடதிசைக் கண், எதிர்க்கவல்ல பகைவரைப் பெறலாம் என்ற வேட்கையால், வடநாடு நோக்கிச் சென்ற போது, இமையவர் இருக்கும் இமயப்பெருமலை, அவன் ஆசை அழியுமாறு இடை நின்று தடுத்து, அவன் ஊக்கத்தை உருக்குலைத்து விடவே, அம்மலைமீது சினம் கொண்டு, அதன் பிடரியில், தன் புலிச்சின்னத்தைப் பொறித்துவிட்டு, எண்ணிச் சென்றது ஈடேறாதாக, மனம் சலித்து மீள்பவனுக்குக் கடல் அரண் கொண்ட வச்சிரநாட்டு