பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

455

அரசன் திறையாகக் கொடுத்த முத்துப்பந்தர், வாட்போர் வல்ல மகதத்து மன்னன், போரில் தோற்றுக் கொடுத்த பட்டிமண்டபம், அவந்தி வேந்தன் உவந்து அளித்த, தொழில்நலம் மிக்க, வாயில் தோரணம் என்ற, பொன்னும் மணியும் கொண்டு, தொழில் வல்ல கம்மியனால் பண்ணப்படாத, இவர்களின் குலமுன்னோர், தனக்கு இடர் வந்துற்றபோது, ஒரொருகால் செய்து உதவிகளுக்குக் கைம்மாறாக, மயனால் செய்து கொடுக்கப்பட்ட இம் மூன்றையும் வைத்து, உயர்த்தோர் ஒன்று கூடி வந்து ஏத்தும் மண்டபம்’ எனப் பொருள் படவரும்...

“இருநில மருங்கில் பொருநரைப் பெறாஅச்
செருவெங் காதலின் திருமா வளவன்,
வாளும், குடையுயும், மயிர்க்கண் முரசும்,
நாளொடு பெயர்த்து, “நண்ணாம் பெறுக, இம்
மண்ணக மருங்கின் என் வலிகெழுகோள்” எனப்
புண்ணிய திசைமுகம் போகிய அந்நாள்,
அசைவில் ஊக்கத்து நசைபிறக்கு ஒழியப்
பகைவிலக் கியதுஇப் பயங்கெழு மலைஎன
இமையவர் உறையும் இமையப் பிடர்த்தலைக்,
கொடுவரி ஏற்றிக் கொள்கையின் பெயர்வோற்கு,
மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும்
மகத நன்னாட்டு வாள் வாய் வேந்தன்
பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும்
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிலந்தோங்கு மரபின் தோரண வாயிலும்,
பொன்னினும் மணியினும் புனைந்தன வாயினும்
நுண்வினைக் கம்மியர் காணா மரபின

துயர்நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு