பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

456

தமிழர் வரலாறு


மயன் விதித்துக் கொடுத்த மரபின இவைதாம்
ஒருங்குடன் புணர்ந்து ஆங்கு உயர்ந்தோர் ஏத்தும்

அரும்பெறல் மரபின் மண்டபம்.”
- சிலம்பு : 5 , 89 - 112;

சிலப்பதிகார வரிகளை எடுத்துக் காட்டிவிட்டுப் பின்வரும், திறனாய்வினை மேற்கொண்டுள்ளார் :

‘'கரிகாலன் வரலாறு எழுதிய பண்டைய, இன்றைய வரலாற்று ஆசிரியர் ஒவ்வொருவரும், இப்பகுதி அளிக்கும் சான்றுகளுக்கு, ஆராயாதே மதிப்பளித்து, இந்திய அரசர்கள் அனைவரையும் வெற்றி கொண்ட, தன் படையோடு இமயத்தின் உச்சிக்கே அணிவகுத்துச் சென்ற, தன் அரச சின்னத்தை அம்மலை மீது பொறித்த, மீண்டு வருங்கால் போராட்டத்தின் பின்னரோ, அல்லது வேறு வகையிலோ, வட இந்தியப் பேரரசர்கள் மூவரிடமிருந்து திறைப்பொருள் பெற்ற பெருமைகளை, இம் மன்னனுக்கு ஏற்றியுள்ளனர். இந்தியாவின் தென் கோடியிலிருந்து, இமாலயத்தின் உச்சி வரையான, ஒரு நெப்போலியப் படையெடுப்பு, இந்திய வரலாற்றின் எந்தக் காலத்திலும் எண்ணிப் பார்க்கவும் இயலாத, ஒர் அருஞ்செயலாகும்... கரிகாலன் புகழ் பாடிய அவன் சமகாலப் புலவராம், உருத்திரங்கண்ணனார், இதைக் குறிப்பிடவில்லை; ரேனாடுக்கு அப்பால், கரிகாலன் கொண்ட வெற்றி எதையும் குறிப்பிடவில்லை; கரிகாலனின் அத்துணை அருஞ்செயல்களையும் முறைப்படுத்திக் கூறும், தெலுங்குக் கல்வெட்டுக்கள். இதை, மறைமுகமாகவும் குறிப்பிடவில்லை. ஆகவே, சிலப்பதிகார ஆசிரியரின் இக்கூற்று கற்பனைக் கண்டு பிடிப்புகளாம் என்றே நான் மதிக்கின்றேன். அம்மூன்று பொருட்களை, அன்பளிப்பாக, யாரோ சிலரிடமிருந்து, கரிகாலன் பெற்றான் என்பது நம்பக் கூடாத ஒன்று அன்று; ஆனால், இமயம்வரை படையெடுத்துச் சென்றான் என்பது தெளிவாக, ஒரு பிற்காலக் கட்டுக்கதையே அல்லது வேறன்று’ Giving its face value to the testimony of this passage every person, ancient or modern, who has written about Karikal, has