பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

460

தமிழர் வரலாறு


படுத்திக்கூறும், தெலுங்குக் கல்வெட்டுக்கள், இதை, மறை முகமாகவும் குறிப்பிடவில்லை,” என்பதாம்:

கரிகாலன், காவிரிக்குக் கரை அமைத்தான் : கரை அமைக்க வரமறுத்த திரிலோசனின் கண்களை அழித்தான் எனக் கூறும், பல, தெலுங்குச் சோழக் கல்வெட்டுக்களை எடுத்துக்காட்டியுள்ளார் : அந் நிகழ்ச்சிகளை உண்மையென ஏற்றும் உள்ளார், திருவாளர் அய்யங்கார் என்பது உண்மை: (பக்கம் : 363, 364) ஆனால், அச்செயல்களைப், பரணர் முதலாம் சங்க காலப் புலவர்கள் பாராட்டும் கரிகாலனுக்குப் பெருமை சேர்ப்பதற்கான அகச்சான்றுகளாகக் கொள்ளாமல், அவனைச் சங்க காலத்திற்கு மிக மிகப் பிற்பட்ட காலத்தவனாக கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குக் கொண்டு வந்து நிறுத்து வதற்கான அகச்சான்றுகளாகவே கொண்டுள்ளார். ‘ஆகவே, கரிகாலன் சிறப்புற்றிருந்த காலம், பெரும்பாலும் நான்காம் நூற்றாண்டின் இறுதியும், ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கமுமாம். அவன் ஆட்சியின் உச்ச காலம். கி.பி. 400 [Hence the most probable period, when karikal flourished was the end of the IV and beginning of the V century, the central year of his reign being 400 A. D. (Page: 382) என முடித்திருப்பது காண்க.

மேலும் கரிகாலனின் இமயப் படையெடுப்பைக் கூறவில்லை எனத் திரு அய்யங்கார் அவர்களால் குறிப்பிடப் படும் அத்தெலுங்குச் சோடக் கல்வெட்டுக்கள், கரிகாலனின் மிக ப்பெரும் வெற்றிகளாம் எனத் திரு. அய்யங்கார் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட. வெண்ணி, வாகைப்போர் வெற்றிகளையும் குறிப்படவில்லை : ஆகவே, அக்கல் வெட்டுக்கள் இமய வெற்றியைக் குறிப்பிடாமை. அவ்விமய வெற்றியை நடவாத ஒன்றாகக்கொள்வதற்கான நல்ல சான்றக அமையாது.

ஆக, இதுவரை கூறிய விளக்கங்களால், சிலப்பதிகாரம் அளிக்கும் சான்று கொண்டு, கரிகாலனின் இமய வெற்றியை