பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

463

 அவ்வாறு பெயர் பெற்றது போலும் என்று கருத இடம் தருகிறது. இமயத்துக்கப்பாலும் அவ்வளவன் செல்லக் கருதியிருந்ததை, அம்மலை தடுத்துவிட்டதாக இளங்கோவடிகள் குறிப்பிட்டதற்கு, மேற்குறித்தபடி, அச்சோழன் சென்ற காலத்தில் பணியால் முழுதும் மூடப்பட்டு, அக்கணவாய் அடைபட்டிருந்தது என்பதே கருத்துப் போலும்,.

தமிழர் வரலாறு என்ற தம் நூலை எழுதி முடித்து மூன்று ஆண்டுகள் கழிந்த பின்னரே, திருவாளர், மு, ராகவ அய்யங்கார் அவர்களின் இக்கட்டுரை. வெளிவந்தமையால், திரு. பி. டி. எஸ். அவர்களால் திரு. மு. ரா. அவர்களின் இம்முடிவினை அறிய இயலாமல் போய் விட்டது. அதனாலேயே, கரிகாலன் இமயவெற்றி, ஒரு பிற்காலக் கற்பினை எனக் கூறவேண்டியவராயினர் : கல்வெட்டுக்களைத் தேடித் தெலுங்குச்சோழர்கள் வாழ்ந்த கடப்பா, கர்னூல் வரை சென்றவர், கரிகாலனைத் தொடர்ந்து விக்கிம், பூட்டான் வரை சென்று ஆங்குள்ள கல்வெட்டுக்களைக் கண்டிருப்பாராயின். இத் தவறான முடிவிற்கு வந்திருக்க மாட்டார். கரிகாலன் இமய வெற்றி, உண்மையொடுபட்ட, ஒப்பற்ற வெற்றி என ஓங்கிக் கூறியிருப்பர்.