பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/477

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600 க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

467


பொருட்களைக் கொண்டு வந்திருக்கக் கூடும்.” (பக்கம் : 503) எனக்கூறுவது, வரலாற்று உண்மைகளைக் காண மறுத்துக் கண்மூடிக்கொண்டு கருத்தறிவிக்கும் வரலாற்று நெறியறியாதார் கூற்றல்லது, வேறு அன்று.

இனி, இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தே வில்பொறித்த வரலாறு குறித்து அளிக்கும் இலக்கியச் சான்றுகள் வருமாறு :


1)“வலம்படுமுரசின் சேரலாதன்
முந்நீர் ஒட்டிக் கடம்பறுத்து, இமயத்து
முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து”

-மாமூலனார் : அகம் : 127.


2)“ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத்
தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பிணித் தோன்”

-பரணர் அகம் : 396.


3)“பேரிசை மரபின் ஆரியர் வணக்கி”

-பதிற்றுப்பத்து : பதிகம்.


4)“கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்திலங்கு அருவியொரு நரந்தம் கனவும்,
ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னங்குமரி யொடு ஆயிடை
மன்மீக்கூறுநர் மறந்தபக் கடந்தே”

- பதிற்றுப்பத்து : 1. குமட்டுர்க்கண்ணனார்.


5)“கயல் எழுதிய இமய நெற்றியின்
அயல் எழுதிய புலியும் வில்லும்”

- சிலம்பு : ஆய்ச்சியர் குரவை.