பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/481

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

471


நானுாறு அளிக்கும், முதல் இரு அகச்சான்றுகளை ஏற்றுக் கொள்வதே, வரலாற்றுத் திறனாய்வு அறமாம்.

ஆக, அகநானுாற்றில் மாமூலனாரும் (127) பரணரும். (396) : பதிற்றுப்பத்தில் குமட்டுர்க் கண்ணனாரும் (11), சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளாரும். (ஆய்ச்சியர் குரவை கட்டுரைக்காதை) சேரலாதன் இமயத்தே வில் பொறித்த நிகழ்ச்சியை அத்துணைத் தெளிவாக உறுதி செய்திருக்கவும், அவர் சான்றினை ஏற்பது தவிர்த்து, வரலாற்றுப் பேராசிரியர் களுக்கு வேறு வழி இல்லை: நெடுஞ்சேரலாதன் இமயத்தே வில் பொறித்தது. உண்மையொடு பட்ட நிகழ்ச்சியோ அல்லது வெறும் கற்பனையோ, கட்டுக்கதையோ அன்று.