பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/483

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

473

 செங்குட்டுவன் காலத்தில், அத்துணைப்பெரும் படையைத், தமிழகத்திலிருந்து கங்கைக் கரைக்குக்கொண்டு செல்வது இயலாது ; அத்துணைப் பெரும்படை அணிவகுத்துச் சென்றது என்பதை, இந்திய நாட்டு நிலஇயல் பற்றிய அறிவு சிறிது தானும் இல்லாத ஒரு தமிழ்ப் புலவரால் தான் கற்பனை செய்து காண முடியும். செங்குட்டுவன் வட நாட்டுப் படையெடுப்பு, இந்திய நில இயல்பறியாப் புலவர் ஒருவரின் கற்பனை ; அது, இந்திய வரலாறு பற்றி ஏதும் அறியாதவர்க்கு மட்டுமே ஏற்புடையதாகத் தோன்றும் என்கிறார் திரு சீனிவாச அய்யங்கார்.

“The transport of an army of the size necessary for the purpore of fighting with the Trans-gangetic monorchs, is a thing that can be imagined only by a Tamil poet, ignorant of the geography of India.......Senguttuvan’s northern expedition was invented by a poet ignorant of Indian geography and could appear crediube only to those, ignorant of Indian History”. (History of the Tamils : Page: 601):

திரு. அய்யங்கார் அவர்கள் கூற்றுப்படி, செங்குட்டுவன், கி. பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். அவன், வட நாட்டிற்குப் படையெடுத்துச் சென்றான் என்றால், அது கூறும் தமிழ்ப் புலவர்கள். இந்திய நாட்டின் நிலஇயல் அறியாதவர் : இந்திய நாட்டு வரலாறு தெரியாதவர் என்றெல்லாம் கூறும் திரு. அய்யங்கார் அவர்கள், அவ்வாறு கூறுவதற்கு முன்னர் அதே நூலில், ‘'கி. மு. மூன்றாம் நூற்றாண்டில்; (அதாவது, செங்குட்டுவன் காலத்திற்கு 900 ஆண்டுகளுக்கு முன்னர்) அவர் கூற்ப்படி வடஇந்தியமொழி, தென்னிந்தியர்களுக்குப்புரிந்திருந்தது . The chiefvernacular dialect of N. India was understood by the S. Indians in the 3nd century B.C.” (Page : 140) :அசோகன் கல்வெட்டெழுத்து எனப்படும் எழுத்தே, இந்தியா முழுவதும்