பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

474

தமிழர் வரலாறு

 கையாளப்பட்டது “The same script, now called the Asokan, was ured, through out India in the III century B. C. ‘ (Page : 140) என்றும் கூறியுள்ளார். அது மட்டும் அன்று : அதற்கு மேலும் ஒரு நூற்றாண்டிற்கு முன்னர், அதாவது, கி. மு. நான்காம் நூற்றாண்டில், வடஇந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையிலான வாணிகம் அதற்கு முன எப்போதும் இருந்திராத அளவு பெருகியிருந்தது “In the IV century B.C. the trade between North and South India, assumed greater proportion than ever (Page : 141), என்றும், குமரி முதல் பாடலிபுத்திரம் வரை, ‘கிரீச்” எனும் ஒலி, தொடர்ந்து ஒலிக்க, வரிசை வரிசையாகச் செல்லும் நாட்டு வண்டிகளில் நடைபெற்ற பெருமளவிலான வாணிக நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. “This gives us a picture of a great volume of trade, carried in caravans of creaking carts, passing along roads, good and bad, from Cape-Comorin to Pataliputra” (Page 141) என்றும், அரண்மனைக் கருவூலத்தில் கொண்டு சேர்க்கப்பட்ட பொருள்களுள், தாம்பிரபரணி, பாண்டியகாவடகங்களில் இருந்து வந்த நவமணிகளைக், கெளடல்யர் குறிப்பிடுகிறார்: “In another place, where kaudilya refers to things that find their way to the Royal treasury, he mentions precious stones from —Thambraparni and Pandiya Kavataka” (Page. 142) என்றும், பாண்டிய நாட்டுக்கும், பாடலிபுத்திரத்திற்கும் இடையில், கி. மு. நான்காம் நூற்றாண்டில் இருந்து வந்த, இப்பெரிய போக்கு வரவினை, மெகஸ்தனீசும் அறிந்திருந்தான்.அப்பாண்டிய நாட்டையும் அறிந்திருந்தான்’ “There was intercourse between Pandia Country and Patali puptra in the IV century B. C. and Magesthenes had beard of that country” (Page : 183) என்றும் கி.மு. நான்காம் நூற்றாண்டின் இறுதியில், சந்திரகுப்தன், துறவறம் பூண்டு, பத்திரபாகுவின் மாணவனாகி, அவரோடும், தன்னொத்த