பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

479

he sent people to the city of Madura in the Dakkana, with gifts to woo the daughter of the Panduking and also to secure wives for the rest. A number of Tamil girls, bedecked with ornaments and accompanied by elephants, horses, and waggons, went to ceylon This story...confirms the fact that the pandyas and the Northerners were not strangers to each other, but so familiar with eaeh other that a Pandya girl could be demanded for the hand of Vijaya, as a normal event.” (History of the Tamils. Page: 127-128.)

கங்கைக் கரையைச் சார்ந்த விஜயன், குமரிக்கு அப்பால் உள்ள கடலிடை நாடாம் ஈழத்தை வென்று அரசன் ஆனான்; தாம்பிரபரணி ஆற்றுப் பாண்டியர் மகளை மணந்து கொண்டான் என, கி.மு. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஜாதகாக் கதைகள் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்: இதைத் தமிழகத்து இலக்கியமோ, தமிழகத்துக் கல்வெட்டோ உறுதிசெய்யவில்லை ; ஆகவே இது வெறும் கட்டுக்கதை எனத் தள்ளிவிடவில்லை. வடக்கே உள்ள ஒருவன் தென்னாடு வந்து அரசமைந்து அந்நாட்டுமகளையும் மணந்துகொண்டான் என்ற ஜாதகாக் கதையின் கூற்று, திரு. அய்யங்கார் அவர்களுக்கு வேத வாக்கு. ஆனால், செங்குட்டுவன் வடநாடு சென்று அந்நாட்டு அரசர்களை வெற்றிகொண்டான் எனச் சிலப்பதிகாரம் கூறினால், அது கூறுவதை, வேறு இலக்கியமோ கல்வெட்டோ உறுதிசெய்யவேண்டும் ; அது செய்யப் படவில்லை ; ஆகவே, அது கட்டுக்கதை : திரு. அய்யங்கள் அவர்களின், இத்திறனாய்வு முடிவு, அவர் கூற்றுப்படி, பழி வாங்கும் உணர்வோடு கூடிய வெறும் கற்பனை மாடம் 1 (“Speculation with a vengence’ Page: 138) அல்லது வேறு அன்று,