பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

481

3) “வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென்திசை ஆண்ட தென்னவன்”
-சிலம்பு ; காடுகாண் : 21-22

4) “கயல் எழுதிய இமய நெற்றியில்
அயல் எழுதிய புலியும் வில்லும்
நாவலம் தண் பொழியில் மன்னர்
ஏவல் கேட்பப் பார் அரசாண்ட
மாலை வெண்குடைப் பாண்டியன்.”

--சிலம்பு : ஆய்ச்சியர் குரவை : 1-3.

இவற்றுள், முதலாவது, திரு. அய்யங்கார் அவர்களால் சிலப்பதிகாரத்தின் ஒர் அங்கம் ஆகாத, இளங்கோவடிகளாரால் பாடப் பெறாதது எனக் கருதப்படும், வஞ்சிக் காண்டக் காதை ஒன்றில், இடம் பெற்றிருப்பது, அதிலும், அவ்வாழ்த்துக் காதை ஆசிரியர் யாவரே ஆயினும், அவரால் பாடப்பெற்றது என ஏற்றுக் கொள்ள இயலாததான, அதன் முன்னுரையாகக் கருதப்படும் உரைப்பாட்டு மடையில் இடம் பெற்றிருப்பது. ஆகவே, அதை அகச்சான்றாக ஏற்றுக் கொள்வது பொருந்தாது எனத் தள்ளிவிடல் கூடும்.

அதே போல், இரண்டாவதும் சிலப்பதிகாரத்தின் ஒரு பகுதியாக, திரு. அய்யங்கார் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மதுரைக் காண்டத்தில் இடம் பெற்றிருந்தாலும், அவர் கருத்துப்படி, அக்காண்டத்து இறுதிக் காதை ஆகிய கட்டுரைக் காதையின் தொடர் வரிகளாக அல்லாமல், பிற்காலத்தவர் ஒருவரால், மதுரைக் காண்டம் முழுமைக்குமான முடிவுரை எனக் கருதப்படும் கட்டுரையில் இடம் பெற்றிருப்பது என்ற காரணம் காட்டி, அகச்சான்றாக ஏற்றுக் கொள்ளப்படாமல் ஒதுக்கிவிடல் கூடும்.

ஆனால், இதை அவ்வாறு புறக்கணித்து விடுவதற்குத் திரு. அய்யங்கார் அவர்களும் விரும்பவில்லை. பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட தானே கள்வன் என்பதை


த. வ. 11-31