பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/496

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

486

தமிழர் வரலாறு

அளிக்கிறது. அவள் தெய்வத் திருமேனி உறையூர்க் கோயிலில் இன்றும் வழிபடப்பெறுகிறது. ஆறாம் நூற்றாண்டை அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாகச் சோழர்கள் வரலாற்றிலிருந்தே மறைந்து விட்டனர். ஆதலின், மேலே கூறிய பழங்கதைகளுக்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ, அவை அந்த ஆறாம் நூற்றாண்டில்தான் இடம்பெற்றன என்பது உறுதி.

செங்கணான் :

இக்காலத்தைச் சேர்ந்த ஒரு சோழ அரசன், செங்கணான். வைஷ்ண ஆழ்வார்களில், நனி மிகப் பழைய காலத்தைச் சேர்ந்தவர்களுள் ஒருவரான பொய்கையாழ்வாராக பெரும்பாலும் கருதப்படும் புலவர்ப் பொய்கையாரின் பாட்டுடைத் தலைவன் இவன். அந்நூல் களவழி நாற்பது எனும் பெயருடையது. அது இச்சோழ அரசன், சேரன் கணைக்கால் இரும்பொறையோடு மேற்கொண்ட போர்க்களக் காட்சிகளைக் குருதி வேட்கை உணர்வோடு பாடப்பெற்ற நாற்பது பாடல்களைக் கொண்டது. சோழ அரசனாகப் பிறப்பதற்கு முன்னர், சிவன் மீது பேரன்பு கொண்ட சிலந்தியாக இருந்தவன் அவன் என்ற பழங் கதையைக் கொண்டுளது பெரிய புராணம். பார்வதி, காவிரிக் கரையில் இருந்த ஒரு சிவலிங்கத்தை மக்கள் வடிவில் வழிபட்டு வந்தாள். பார்வதியைப் போலவே, அச்சிவலிங்கத்தின் மீது பக்தி கொண்டிருந்த ஒரு சிலந்தி, ஞாயிற்றின் ஒளி வெப்பத்திலிருந்து அச்சிவலிங்கத்தைக் காத்தற் பொருட்டு, அதன் தலைமீது நாள் தோறும் வலைபின்னி வந்தது. ஆனால் அதே சிவலிங்கத்தின் மீது பக்தி கொண்டிருந்த யானை ஒன்று, தன் துதிக்கையால், காவிரி ஆற்று நீரை முகந்து வந்து, அச்சிவலிங்கத்தை நாள் தோறும் நீராட்டி வந்தது; அதனால் சிலந்தி வலையும், இயல்பாகவே அறுபட்டும் வந்தது. பக்தி வெறியால் ஆத்திரங் கொண்டு, அந்த யானையின் மூக்கினுள் நுழைந்து கொண்டது. அதனால், யானை மூச்சுத்திணறி இறந்தது; அவ்வாறு