பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/500

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

490

தமிழர் வரலாறு


பாராட்டியுள்ளனர். ஆகவே, தென்னிந்தியாவில் உயிர் பெற்றிருக்கும் அதாவது, நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற நாள் தொட்டு, தெய்வத் தன்மைக்காகப் புகழப் பெற்ற, நாள்தோறும் வழிபாடும், விழாவும் கொண்டு விளங்கும் இக் கோயில்களெல்லாம், கி. பி. ஆறாம் நாற்றாண்டில் எழுந்தனவே ஆம். செங்கணான் செயல் ஒன்றே, பெருமளவில் கோயில் கட்டியமைக்கான சான்று. இக் கோயில்களெல்லாம் மரத்தாலும், செங்கல்லாலுமே கட்டப் பெற்றன : செங்கல், சிறப்பாக அடித்தளத்திற்கு மட்டுமே பயன் கொள்ளப்பட்டது . இந்தியப் பழங் காடுகள் இன்னமும் முழுமையாக அழிந்து விடவில்லை ; ஆகவே கோயில் கட்டுவதற்கான மரம், தேவைக்கு மேலும் கிடைத்தது. இன்று திருவாங்கூரில் இருப்பதுபோல், மரத் தாலான கூரை, பெரும்பாலும் செப்புத் தகட்டால் மூடப்பட்டது , ஒரோ வழி, கரிகாலன், காஞ்சிக் கோயில் கூரைக்குப் பொன் வேய்ந்தது போல், ஒரோ வழிப், பொன்னாலும் மூடப்பட்டது. மகேந்திர பல்லவன் (கி. பி. 600-625) மலைச் சரிவுகளில் பாறைகளைக் குடைந்து கற் கோயில் அமைக்கும் முறையை முதற்கண் தொடங்கினான். அவன் வழிவந்த நரசிம்மன், பாறைகளை முழுமையாகக் குடைந்து தனிக் கோயில் அமைத் தான். கட்டமைப்புச் சார்ந்த கோயில்கள் எழத் தொடங்கலாயின. தயிசைச் சோழ அரசர்கள் கி. பி. 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டு) இக் கோயில்களையெல்லாம் இடித்துவிட்டு, அக் கோயில்களின் சர்ப்பக்கிருகத்தைக் கல்லால் கட்டினர். பழைய கால சோழர் அமைப்புக் கோயில்கள், சிறிய கர்ப்பக் கிருகம், முன்னே ஓர் அரை மண்டபம் ஆகியவற்றை மட்டுமே கொண்டிருந்தன: பிற்காலத்தில், மேலும் பல மண்டங் களும், திருவுலா வீதிகள், சுற்றுச் சுவர்கள், மேலும் பற்பல கருவறைகள் ஆகியவை இணைக்கப்பட்டுவிட்டன. வடிவமைப்பில் ஒருமைப்பாட்டை எதிர்பார்க்கும் வெளி நாட்டுக் கலை ஆய்வாளர் அதுபோலும் ஒன்றைக் காணப் பெறாமையால், அவர்களின் கலையழகு நுகர் இன்பத்தையே