பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/509

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30ஆம் அதிகாரத்தின் பின் இணைப்பு 1
தமிழ் எழுத்தின் தோற்றம்

தம்முடைய இலக்கண நூலுக்கு ஆதாரமாகக் கொண்ட மரபு வழிப்பாடல்களுக்கு முற்பட்டதான, இயற்கைப் பாடல்கள் என அழைக்கப்படும் பாடல்களின் வளர்ச்சிட் பருவத்திற்கு, ஐந் நூறு ஆண்டுகளை வகுப்பது, மிகைப்படுத்தப் பட்ட மதிப்பீடு ஆகாது. இவ்வகையில் தமிழ் இலக்கியத் தோற்றத்தின் பிற்பட்ட கால எல்லையாக, ஏறத்தாழ கி.மு. 1000 ஐ அடைகிறோம்.

(It will not be an exaggerated estimate to ascribe a period of five centuries to the development of, what one might call the natural poetry, which preceded the conventional poetry on which Tolkappiyanar based his grammar. We thus reach about 1000 B, C as the later limit of the birth of Tamil poetry: Page : 71.)

இவ்விலக்கிய மரபுகளிலிருந்து, மக்கள் மேற்கொண்டு இருந்த உண்மை வாழ்க்கை நிலையைப் பாவாணர்கள் பாடிய பாக்கள், உள்ளது உள்ளவாறே எடுத்துக் காட்டிய அக்காலங் களுக்குக் கற்பனையில் பின் நோக்கிச் செல்லலாம். அந்தக் கால கட்டத்திலிருந்து, பாக்கள் எழுவதற்கு முற்பட்டதான ஒரு காலத்திற்குப் பின் நோக்கிச் சென்று இந்தியர்கள், அந்நனிமிகப் பழங்காலத்தில் நடத்திய வாழ்க்கைக் காட்சியை மின்னலின் ஒளிக்கீற்றுகள் போல், அங்குமிங்குமாகக் கானக்கிடைக்கும், காட்சியைப் பெறலாம். நனி மிகப் பழங்காலத்தை இவ்வாறு நுழைந்து பார்ப்பதன் மூலம், தென்னிந்தியர்களின், கி.மு. 2000, அல்லது அதற்கும் முற்பட்ட காலத்து வாழ்க்கை நிலையினைக், கண்ணெதிர் காணலாம் போல் காணலாம். அவ்வாறு செய்வதற்கு முன்னர், அந்நனிமிகச் சேய்மைக்