பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/510

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

500

தமிழர் வரலாறு


கண்ணதாய பழங்காலத்தில் வளர்ச்சிவேகம், வானூர்தி கம்பியில்லாத் தந்திகளின் காலமாம், இன்றைய வளர்ச்சி வேகத்தினும் மிகமிகக் குறைவு என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும். இன்றைய வாழ்க்கையின், மூச்சு விடுவதற்கும் இடைவெளியில்லா விரை வான மாற்றமும், வழுக்கும் பனிப்பாறைகளின் ஆறுபோலப் பலனாலும் உணர்ந்து கொள்ள இயலாப் படை நாட்களின் மெதுவான சிந்தனை செயல்பாடுகளும் இருகோடித் துருவங்கள் போலும் வேறுபாடு உடைய, ஆகவே சி.மு. 2000ன் எது உண்மை நிகழ்ச்சியோ, அதவே, அதனினும் நனிமிகப் முற்பட்ட பழங்காலத்திலும் உண்மை நிகழ்ச்சியாகும்.

(From these conventions, we can go back in jonmagination: to the ages when the poems, Sung by bards faithfully reflected the life, which people actually led. From this age we can go back to the age before the rise of poetry and get a alimbse of the life which indians led in the very remote past. Peeping thus in to the far past; we can visualise the life of the South Indians about 2000 B.C. or earlier. Before going so, we aught to remember that progress in remote antiquity was much slower than in present days of wireless, telegraphy and aeroplane. The breathiessly hasty changes of our present day life and the slow movement, imperceptible as that of glacier, of life, and thought in ancient days are poles apart. Hence, what was true of 2000 B.C. was squaily true of much earlier times Page : 64)

மக்கள் வாழ்ந்து வளர்ந்த சுற்றுச் சூழலை அடிப்படையாகக் கொண்டே எழுந்தமையால், மாற்றவோ, அழிக்கவோ, முடியாததான, தனக்கே உரிய இலக்கிய மரபுகளோடு இணைந்து, முழுமையாக வளர்ச்சி பெற்ற ஓர் இலக்கியத்தையே அகத்தியர் கண்டார். முழுமையாக வளர்ச்சி பெற்ற இலக்கிய நடையோடு கூடிய ஒரு மொழியையும் அவர்