பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணைப்பு

501


கண்டார். அம்மொழி குறித்த இலக்கணத்தை இயற்றினான். அவ்வளவே;

(Agastya found a fully developed literature with iterary Conventions of its own, unalterable because, they were based on the condition of the environment in which people lived and grew. He also found a language with a perfected literary dialect and he wrote out the grammar of that language and that literature and no more. Page: 219)

அகத்தியனார், தம்முடைய இலக்கணத்தைத், தமிழ் எழுத்துக்கள் முப்பது என்ற எண்ணிலேயே தொடங்கினார் என நாம் கொள்ளலாம். எழுத்து என்ற சொல், தமிழ் இலக்கண ஆசிரியர்களால், குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பான நிலையில் ஆளப்பட்டுளது. ஒலியையும். உருவத்தையும் ஒரு சேரக் குறிக்கும் வகையில், அது, பெயரிடப்பட்டுளது. முன்னது ஒலிவடிவில் உள்ள எழுத்து எனப்பொருள்படும். “ஒலிவடிவு எழுத்து” என்றும், பின்னது நேர்க்கோடுகளாகவும், வளைவுக் கோடுளாவும் வரையப்பட்ட எழுத்து எனப் பொருள்படும் “வரிவடிவு எழுத்து” என்றும் அழைக்கப்படும்.

(We way persume that Agattiyanar began his grammar with enumerating Tamil letters as thirty. The word eluttu is used in a peculiar sense by Tamil grammrians. It names a concept which includes the sound of a unit syllable and the sign rhatrepresents it. The former is called “olivadiveluttu,” the eittu, that has the form of a sound, and the latter varivadivejuttu,” the eluttu that has the form of a figure made of straight or curved lines. Page : 214)

எழுத்துக்கள் குறித்து அகஸ்தியனார் இலக்கணம் வகுப்பதால் அவர் கூறும் இலக்கணப்படியே, தமிழ் எழுத்து முறை, அவர் காலத்திலேயே இருந்திருக்க வேண்டும். (As Agattiyanar treats of Tamil letters, Tamil writing must have existed in his time. Page : 215)