பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/517

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணைப்பு

507


கணிப்புக் காண முடியாத காலத்தே வாழ்ந்திருந்த அவர் ஆசிரியர் காலத்துக்கும் எத்தனையோ நூற்றாண்டு காலத்துக்கு முன்னரே நிகழ்ந்திருக்க வேண்டும்.

தமிழ் ஆராய்ச்சி (Tamil Studies) என்ற நூலின் ஆசிரியர், திருவாளர் எம் சீனிவாச அய்யங்கார் அவர்கள், பல்வேறு சான்றுகளை எடுத்துக்காட்டி, தொல்காப்பியர் கி. மு. 300க்கும் முற்பட்ட காலத்தவர் (பக்கம் 117) எனக் கூறுவதை அறியாதே, திருவாளர். பி. டி. எஸ். அவர்கள் தொல்காப்பியரைக் கி. மு. முதல் நூற்றாண்டின் கடைவாயிற்கண் நிறுத்தவும் மறுத்துள்ளார். (பக்கம் : 216)

தொல்காப்பியர் காலம் குறித்து அவர் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொண்டு கனிப்பதாயினும் , தொல்காப்பியர் காலம், கி. மு. முதல் நூற்றாண்டாயின், அவர் கூற்றுப்படி, தொல்காப்பியரால் இலக்கணம் வகுக்கப் பெறும் தமிழ், அவருக்குக் குறைந்தது 500 ஆண்டுகளுக்கு முன்பே வரிவடிவம் பெற்றிருக்க வேண்டும். அங்ஙனமாயின், தமிழ், கி. மு. 500க்கும் முன்பே வரிவடிவம் பெற்றுவிட்டது என்பது உறுதியாகிறது.

திருவாளர் பி. டி. எஸ். அவர்கள் கி. மு. 500 முதல் கி, மு. 1 வரையான’' காலத்தில் எண்ணற்ற தமிழ்ப்பாக்கள் பாடப்பட்டிருக்க வேண்டும்...அந்த இலக்கியங்கள் அறவே அழிந்துபோயினவாக நம்பப்படுகிறது என்றாலும், இப்போதுள்ள தொகை நூல்களில் இடம் பெற்றிருக்கும் பாடல்களில் சில அக்காலத்தைச் சேர்ந்தனவாதல் கூடும்’' (பக்கம் : 162) எனக் கூறிவிட்டுச் சான்றுக்காக நற்றிணை, குறுந்தொகைகளிலிருந்து சில பாக்களை எடுத்துக் காட்டியுள்ளார். அவ்வகையால், அவர் கூற்றுப்படி, கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாக்களைக் கொண்டதாக அவரால் மதிக்கப்படும் குறுந்தொகையில், வேதம் ஒதும் பார்ப்பன மகனைக் குறிப்பிடும் ஒரு பாட்டு, வேதத்தை எழுதாக்