பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/518

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

508

தமிழர் வரலாறு


கற்பின் பாட்டு எனக் குறிப்பிடுகிறார் என்றால், அவர் காலம் வரை, வேதம் எழுத்துருதம் பெறவில்லை: மாறாகக் தமிழ் எழுத்துருவம் பெற்றுவிட்டது என்பது தெளிவாகிறது. இது கொண்டு மதிப்பிட்டாலும் தமிழ் எழுத்து, கி. மு. மூன்றாம் நூற்றகண்டிற்குச் சில பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வரிவடிவம் பெற்றுவிட்டது என்பது உறுதியாகிறது.

கூறிய இவ்விளக்கங்களால் தமிழ், வெளிநாட்டிலிருந்து வந்த கல்வெட்டு வல்லுநர் துணையால், கி மு. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் வரிவடிவம் பெற்றது என்ற, திரு. அய்யங்கார் கூற்று முன்னுக்குப் பின் முரண் பட்டு நிற்பது காண்க.

தமிழ், கி. மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வரிவடிவம் பெற்ற விட்டது என்பதே உண்மை.