பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/521

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணைப்பு

511


காலத்தில் பாடப் பட்டிருக்க வேண்டும். (The earliest of them (The Ten Songs], called porunararruppadai, which sings about karikalan in the earlier part of his reign, must have been composed a little before 400 A. D. (Page : 160.]

“கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இளந்திரையன் புகழ்பாடும் பெரும் பாணாற்றுப்படையில்தான், ‘கச்சி’ எனற பெயர் முதன் முதலாக இடம் பெற்றது. (Kacci for the first time occur in the Perumpanarruppadai, a poem ‘n eblogy of ilandiraiyan (V century A. D. Page: 322)

‘பாண்டியன் நெடுஞ்செழியனின் அவைக்களப் புலவரும் அவன் புகழ்பாடும் நெடிய பாட்டாம் மதுரைக் காஞ்சியின் ஆசிரியருமாகிய மாங்குடி மருதனார். கி. பி. 450 ஐச் சேர்ந்தவர் [Maduraikkanje, a long poem in praise of the Pandya Nedunjelian, by his fovourite poet Mangudi Marudanar (C. 450. AID.) Page : 220]

‘கரிகாலன் புகழ்பாடும் பிறிதொரு நெடிய பாட்டு, கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப் பாலை.”, |[The other long poem sung in praise of karika! is Pattinappalai, by Uruttirangannanar of Kadiyalur, Page : : 43.] கரிகாலன் புகழ் பெருக வாழ்ந்த காலம், பெரும்பாலும், கி.பி. நான்காம் நூற்றாண்டின் இறுதியும், ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆம். [The most psobable peried, when Karikal {{ourished was the end of the IV and beginning of the V century, the central year of his reg being 400 A. D. Page: 382.]

‘'பத்துப்பாட்டு என்ற பெயரில் தொகுக்கப்பெற்ற பாக்களில், நான்கு பாக்கள், (1. பொருராற்றுப்படை , 2. பெரும்பாணாற்றுப்படை, 3. மதுரைக் காஞ்சி, 4. பட்டினப்பாலை) முன்னரே ஆய்வு செய்யப்பெற்று. விட்டன. ஏனைய ஆறும் (1. முருகாற்றுப்படை, 2. சிறு பாணாற்றுப்படை, 3. முல்லைப்பாட்டு, 4. நெடுநல்வாடை,