பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/522

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

512

தமிழர் வரலாறு


5. குறிஞ்சிப்பாட்டு, 6. மலைபடுகடாம்.) காலத்தால் பிற்பட்டவை : கி. பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. [Four of the poems gathered together under names of Pattuppattu have been already discussed. The other six are later and belong to the VI century A. D. Page ; 537.]

இவ்வாறெல்லாம் கூறிப், பத்துப்பாட்டுப்பாக்களைக் கி. பி. 100க்கும் 600க்கு இடைப்பட்ட 200 ஆண்டு கால அளவில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளளார், திருவாளர், அய்யங்கார் அவர்கள்.


திரு முருகாற்றுப்படை முதலாக, மலைபடுகடாம் ஈறாக உள்ள பத்து நெடிய பாக்களும், பத்துப்பாட்டு என்ற ஒரே தலைப்பின் கீழ்த் தொகுக்கப்பெற்றிருந்தாலும், அவை அனைத்தையும் ஒரே காலத்தைச் சேர்ந்தனவாகக் கொள்ளாமல், அவை ஒவ்வொன்றையும் வெவ்வேறு காலங்களில் கொண்டுசென்று நிறுத்துவது போலவே, நற்றிணை நானூறு முதலாக, புறநானூறு ஈறாக உள்ள எட்டு நூல்களும் எட்டுத் தொகை என்ற ஒரே தலைப்பால் அழைக்கப் பெற்றாலும், அவை அனைத்தையும ஒரே காலத்தைச் சேர்ந்தனவாகக் கொள்ளாமல், அவை ஒவ்வொன்றையும் வெவ்வேறு காலங்களில் கொண்டுசென்று நிறுத்தியுள்ளார். திருவாளர் அய்யங்கார் அவர்கள்.


நற்றினை, பன்னாடு தந்த மாறன் வழுதியின் ஆணையாலும், குறுந்தொகை, பூரிக்கோவாலும் தொகை நூல்களாகத் தொகுக்கப்பெற்றன. அவ்விரு அரசர்களுமே பெரும்பாலும், கி. பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாவர். [The Natrinai was made in to an anthology, by the orders of Pannaduthanda Maran Valudi and Kurunthogai of purikko, both Kings, probably of the VI century A. D. (page : 158).]

கி. மு. 500 முதல், கி. மு. 1 வரையான இந்த ஐந்நூறு ஆண்டுகளில், எண்ணற்ற தமிழ் இலக்கியங்கள் பாடப்