பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/523

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணைப்பு

513


பட்டிருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், தமிழ்மொழி குறித்த வியத்தகு நிலையிலான தனிமிகப் பொருந்தும் இலக்கணங்களை அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இயற்றியிருக்க இயலாது. அந்த இலக்கியங்கள் அறவே அழிந்துபோயினவாக நம்பப்படுகிறது. என்றாலும், இப்போதுள்ள தொகை நூல்களில் இடம் பெற்றிருக்கும் பாடல்களில் சில, அக்காலத்தைச் சேர்ந்தனவாதல் கூடும் என் நான் எண்ணுகின்றேன். அவற்றுள் ஒரு சில, பாடினோர் பெயர் அறியமாட்டா நிலையின. அதற்குக் காரணம், அவை தனி மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தனவாதலின், தொகை நூல்களில் அவை தொகுக்கப்பெற்ற காலத்தில், அவற்றைப் பாடியவர் பெயர் மறந்திருக்கக் கூடும்,

[A vast amount of Tami; Literature must have been composed during these five centuries. Otherwise Agattiyanar and Tolkappiyanar, could not have composed their wonderfully occurate grammars of Tamil language. This literature is believed to have entirely perished; but I think some of the oldest odes in the existing antholgies may belong to this period. A few of them are anonymous, Perhaps this anonymity is due to the fact, that being very old poems, the names of the authors had been forgotten by the time they were included in the anthologies, (Page : 162)]

இவ்வாறு கருத்துத் தெரிவித்து விட்டு, 163 முதல் 180 வரையான பக்கங்களில், நற்றிணை, குறுந்தொகைகளிலிருந்து பல பாடல்களை எடுத்தாண்டுள்ளார்.

அகநானுறு, இறையனார் அகப்பொருள் சூத்திரங்கள் அறுபதுக்கும், சங்கப் புலவர்கள் பொருள் விளக்கம் அளிக்கும்போது, அப்புலவர் பேரவைக்குத் தலைமை தாங்கிய உருத்திரசன்மனால், உக்கிரப் பெருவழுதியின் ஆணைப்படி தொகுக்கப்பெற்ற முதல் தொகை நூலாகும். அத் தொகை நூல் பாக்களில் சில தொன்மை வாய்ந்தன; ஏனைய, கி. பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டைச்

த.வ,II---33