பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/525

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணைப்பு

515


பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிநூற்றைம்பது என்ற வேறு நான்கு தொகை நூல்களும் உள்ளன. (Besides these four anthologies there are four others, called Five short hundreds, the ten toid Ten: the paripadai and the Kati one hundred and tifty. (Page . 159.) காலத்தால் முற்பட்டனவாய அந்நான்கு தொகை நூல்களில் தொகுக்கப்பெற்ற பாக்களில் சில, இந்நான்கு தொகை நூல்களில் தொகுக்கப்பெற்ற பாக்களினும் காலத்தால் மிக மிக முற்பட்டனவாம் (Some of the poems) that constitute the four early anthologies are much eatsier than those belonging to these later four. page: 160)]

இவ்வாறு ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை ஆகிய நான்கும், நற்றிணை, குறுந்தொகை அகநானுறு, புறநானுறுகளினும் காலத்தால் பிற்பட்டனவாம் எனப் பொதுவகையான காலக்கணிப்பு செய்த திரு. பி. டி. எஸ். அவர்கள், அவை ஒவ்வொன்றிற்குமான காலம் குறித்து, தனித்தனியாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐங்குறு நூறு : எந்த ஒரு பாட்டும், கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்னர்ப் பா ட ப் ப ட் டி ரு க் கா து: The five short hundred ; None of the poems could have been composed earlier than the V century A. D. (Page : 495)]

பதிற்றுப்பத்து பாடிய புலவர்கள், கி. பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமணர்கள் ஆவர். [The poets of the Ten told Ten were Brahmanas of the V or V. century A. D. (Page : 495)]

பரிபாடல் எழுபது: பாடலாசிரியர்களின் பெயர்களைப் பொறுத்த அளவில், அவர்கள் அனைவரும் கி. பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்பதை உணர்த்துகின்றன; [The paripadal seventy: The author’s names So far as known show, that they belonged to the V1 century A.D. (Page : 583)]