பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/527

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணப்பு

517

 காலம் கணிக்கும் நிலையில், அக்கரிகாலன் காலத்தை அறுதியிட்டு வரையறுத்துள்ளாரா என்றால் இல்லை; அங்கும் பெரும்பாலும் இயலக்கூடியதுதான் [The most probable period. Page : 382.]

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் புகழ் பாடும் மதுரைக்காஞ்சி, பட்டினப் பாலைகளுக்குக் காலம் கணித்திருக்கும் திரு. அய்யங்கார், அவன் காலம் இது என வரையறுத்துள்ளாரா என்றால் இல்லை; அவனுக்குப் புகழ் சேர்க்கும் தலையாலங்கானப் போர் குறித்த ஆய்விற்குத், தம் நூலில் 443 முதல் 460 வரையான 18 பக்கங்களைச் செலவழித்திருக்கும் அவர், அவன் காலத்தை வரையறுத்துக் காண சிறு முயற்சி தானும் எடுத்துக் கொண்டாரல்லர். அது மட்டுமன்று; அவன் புகழ்பாடுவனவே மதுரைக்காஞ்சியும், நெடுநல்வாடையும், ஆகவே இரண்டும் ஒரே காலத்தில் பாடப்பட்டனவே ஆதல் வேண்டும். ஆனால், மதுரைக் காஞ்சியைக் கி. பி. 450 ல் நிறுத்திவிட்டு (பக்கம் : 224), நெடுநல்வாடையைக், கி. பி. ஆறாம் நூற்றாண்டிற்குத் தள்ளிக் கொண்டு வந்துள்ளார். (பக்கம் : 537) நெடுஞ் செழியனுக்கு 150 வாழ்வாண்டுகளை வாரி வழங்கியுள்ளார்:

பன்னாடு தந்த மாறன் வழுதியும், பூரிக்கோவும், கி. பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள், அவர்கள் ஆணையின் படித் தொகுக்கப்பெற்றவை முறையே நற்றிணையும், குறுந்தொகையும்: ஆகவே அவை இரண்டும் கி. பி. ஆறாம் நூற்றாண்டில் தொகுக்கப்பெற்றனவாம் எனக் கூறும் திரு. அய்யங்கார் அவர்கள், அவ்விரு அரசர்களின் காலம் கி. பி. ஆறாம் நூற்றாண்டு என்பதை உறுதி செய்யவல்ல வரலாற்றுச் சான்று எதையேனும் காட்டினாரா என்றால் இல்லை: இங்கும் பெரும்பாலும் தான் (Both king probably, of the VI century A. D. page : 158]

உக்கிரப்பெருவழுதியை மையமாக வைத்து, அகநானூறு கி. பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் தொகுக்கப்