பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/530

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

520

தமிழர் வரலாறு


நெடுநல்வாடை : ஆரியக் கோட்பாடுகள் தமிழர் வாழ்க்கையில் வலுவான இடம் பெற்றுவிட்ட காலத்திற்குப் பின்னரே இப்பாட்டு பாடப்பெற்றது. ஆரிய நாகரீகத்தோடு புறம்பாக அல்லாமல், இரண்டறக் கலந்துவிட்டதற்கான எடுத்துக்காட்டுகள் எண்ணற்றனவாம். [The poems was composed after Aryan concepts had definitely established themselves in the life of the Tamils. Not remote but intimate references to Aryan culture adound in the poem, page : 538.]


குறிஞ்சிப்பாட்டு : ஆரியக் கோட்பாடுகள் குறித்த குறிப்பீடுகள், இதில் போதுமான அளவு அதிகமே. [The Aryan allusions are sufficiently intimate, page : 545.]


பட்டினப்பாலை : ஆரிய நாகரீகம் தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளைக் காட்டிலும், காவிரிப்பூம்பட்டினத்தில் விரைவாகப் பரவி, ஏனைய இடங்களில் பெறாத பெரும் செல்வாக்கினைப் பெற்றுவிட்டது.. [Aryan culture spread in it sooner, than in the rest of the Tamil Country and attained there, an influence which it did not possess in other places. page : 353,]


மலைபடுகடாம் : 'நல்லோர் குழீஇய நாநவில் அவை ‘’ யினை எடுத்தாண்டுவிட்டு, இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அவையினர், பெரும்பாலும் சமஸ்கிருதப் புலவர்களாவர்'எனக் கூறியுள்ளார். [The Scholars referred to, were probabiy Sanskrit pandits. Page : 550.]


பதிற்றுப் பத்து : பாடலாசிரியர்கள் பார்ப்பனர்கள் . ஆகவே அப்பாக்கள், ஆரியக் கோட்பாடுகள், ஆகம நெறிகளால் நிறைந்து வழிகின்றன. [The poems were Brahmans Hence the poems teem with references to Aryan ideas and Agama practices. Page: 495-96.]


பரிபாடல் : கணக்கிலா ஆரியக் குறிப்பீடுகள் சமஸ்கிருதச் சொற்கள்: ஆறு பாடல்கள் விஷ்ணுவைப்