பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/536

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

526

தமிழர் வரலாறு


(The Agama rites evolved from pre-Aryan indian cults, were destined to subjugate the minds of Sowth india in the V and Vi century A. D. page : 115) எனக் கூறுவதன் மூலம், அத்தமிழ்ப் பாக்களின் காலத்தைக் கி. பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டிற்கு, அதாவது. தமிழர்கள் ஆகம நெறிக் கடவுளர்களாம் இராமனையும், கிருஷ்ணனையும் அறிந்து கொண்ட காலத்திலிருந்து 1000 ஆண்டுகளுக்கும் பேலான பிற்பட்ட காலத்திற்குக் கொண்டு வந்து நிறுத்துவது முன்னுக்குப் பின் முரணான வாதம், பொருளற்றது என ஒதுக்கித் தள்ள வேண்டிய வாதம்.


பெரும்பாணாற்றுப்படை ஆசிரியராகிய, உருத்திரன் என்பாரின் மகனாகிய கண்ணார் என்ற உறவினை உணர்த்தும் உருத்திரன் கண்ணனார், ஒரு பார்ப்பனர். மேலும் அவருடைய பாடப்பொருள், நான் முன்பே குறிப்பிட்டது போல், இவ்வாசிரியரின் காலத்துக்கு ஆயிர்ம் ஆண்டுகளுக்கு முன்பே ஆரிய மயமாக்கப்பட்டுவிட்ட காஞ்சி. (The author Kannanar, son of Rudra (Uruttirangannanar) was a Brahmana, and the subject of the poem was Kanchi which, as have pointed out, had been Aryanized, for about a thousand years before the time of the author, page : 394) எனக் கூறியதன் மூலம், பெரும்பாணாற்றுப்படையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கடவுளர்களெல்லாம், அக் காஞ்சியில் ஆசிரியர்க்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, கோயில் கொண்டு விட்டனர் என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டார் திரு. அய்யங்கார் என்பது உறுதியாகிறது.


மேலும், இதை வேறு ஓரிடத்திலும் ஏற்றுக் கொண்டுள்ளார் திரு. அய்யங்கார் பெரும்பாணாற்றுப் படையில், பாம்பனைப் பள்ளிமீது படுத்திருக்கும் திருமால் கோலத்தைக் குறிப்பிடும், “நீடுகுலைக் காந்தளம் சிலம்பில் களிறு படிந்தாங்குப் பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன்