பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/539

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணைப்பு

529

அது கூறும் புறநானூறு, கி. பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கூறாமல் கூறியுள்ளார்.

ஆனால் தொல்காப்பியர், நாற்சாதி பிரிவு, தமிழர் வாழ்வில், தமக்கு முன்பே இடங்கொண்டுவிட்டதை உணர்ந்திருந்தமையால், தமிழ் வாழ்க்கைக்கான சட்ட நூலாம் தொல்காப்பியத்தில், அந்நூல் சாதிகளுக்கான இலக்கணத்தைப் பல்வேறு இடங்களில் வகுத்துள்ளார்.

“அடியோர் பாங்கினும், வினைவலர் பாங்கினும்”

“ஓதலும் துரிதும் உயர்ந்தோர் மேன”

“மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே”

“உயர்ந்தோர்க்கு உரிய ஒத்தினான”

“மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே”

“வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை”

“அன்னராயினும் இழித்தோர்க்கு இல்லை”

தொல் : பொருள் : 25, 28, 31, 33, 142, 622, 629.

தொல்காப்பியர் காலம் எதுவே ஆயினும், அவர் காலத்துக்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே, நால்சாதி வகுப்பு, தமிழரிடையே இடங்கொண்டுவிட்டது: அதனால் தான், அதற்குத், தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார் என்பது உறுதி ஆகிறது.

இதைத் திருவாளர் அய்யங்கார் அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார். “தம்முடைய இலக்கண நூலில், ஆரியக் கருத்துக்களைக் கொண்டுவந்து குவிக்கும் ஆர்வத்திற்கு அப்பாற்பட்டவரல்லர் தொல்காப்பியர்.” (Not that Tolkappiyanar rises above the temptation of importing Aryan ideas in to his grammar. page.: 212) “தொல்காப்பியருக்கு, உண்மையான சமுதாய அமைப்பு என்பது

த.வ.II-34