பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/541

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணைப்பு

531

விரைவில் வந்து சேர்வன் எனத் தலைவிக்கு ஆறுதல் கூறவும் உரியவராகிர பார்ப்பார்க்கு உரிய-கடமைகளுள் ஒன்றாகிய “ஆவொடு பட்ட நிமித்தம்” என்ற துறையினையும் (தொ:பொ :1 5) இணைத்திருப்பது காண்க.

அரசர்கள், போருக்குப் புறப்படும் நாள் தம் வெற்றிக்கு வாய்ப்பு தரும் நல்ல நாளாக அமையாது போமாயின், அந்நாளுக்கு முற்பட்டதான ஒரு நல்ல நாளில், தம் குடையையும் வாளையும் போர்க்களம் நோக்கிப் போகவிடுவர். கரிகாலன் அது செய்ததை, “வாளும் குடையும் மயிர்க்கண் முரசும் நாளொடு பெயர்த்து” (சிலம்பு : 5 : 61–62) என்றும், செங்குட்டுவன் அது செய்ததை, “வாளும் குடையும் வடதிசைப் பெயர்க்கு” (சிலம்பு : 26 : 33) என்றும் கூறுவது காண்க. அரசர்கள் நிமித்தம் பார்க்கும் இந்நிலை, தமிழகத்தில் தமக்கு முன்னரே இடம் பெற்றிருந்தமையால், தொல்காப்பியர் அதற்கும் இலக்கணம் வகுத்துள்ளார். “குடையும் வாளும் நாள்கோள்” (தொ. பொரு : 69) என்ற சூத்திரத்தையும், அதற்கு நச்சினார்க் திணியர் தரும், “நாள் கொளலாவது, நாளும் ஒரையும் தனக்கு ஏற்பக் கொண்டு செல்லுழி, அக்காலத்திற்கு ஒர் இடையூறு தோன்றியவழித், தனக்கு இன்றியமையாதனவற்றை, அத்திசை நோக்கி, அக்காலத்தே முன்னே செல்ல விடுதல்” என்ற விளக்கத்தையும் காண்க. மேலும், பாடாண் திணைத்துறைகளுள், ஒன்றாக நிமித்தம் பார்த்தலையும் இணைத்துள்ளார் தொல்காப்பியர்: “நாளும், புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்” [தொ. பொ. 38: 17] என்ற தொல்காப்பியம் காண்க.]

அகத்திலும் புறத்திலும் ஆரியக் கருத்துக்கள் (Aryam ideas in Agam and Puram] எனத் தலைப்பிட்ட 24வது அதிகாரத்தில், “கி. பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் பாடப்பெற்ற பாக்களில், வடக்கத்திய அதாவது, ஆரியக் கருத்துக்கள், கொள்கைகள், நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள், பையப்பைய மிக மிகப் பையப்பைய, நுழைந்துவிட்டன. (In to the poems that were composed in