பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/542

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

532

தமிழர் வரலாறு.

the IV and V centuries A; D., slowly, very slowly entered, chiefly by way of allusions Northern (Aryan) ideas, concepts, beliefs and superstitions] எனத் தோற்றுவாய் செய்துவிட்டு “கர்மா” என்ற துணைத்தலைப்பின் கீழ், “இப்பிறவியில் செய்த நல்வினைப் பயனை, இறப்பிற்குப் பின்னர், மறு பிறவியில் அனுபவிக்கும் கர்மாவின் விதிமுறை ஒரு பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது” [The law of Karma, by which the results of good deeds in this life are reaped in the one, after death is stated in one passage. [page: 468] என்றும், “மற்றொரு பாட்டில், இப்பிறவியில் ஒருவன் செய்த நல்வினைப்பயனை, உம்பர் உலகத்தில் அனுபவிக்க இயலுமா அது இல்லாயின், மாறிப் பிறப்பில்லாமை இயலுமா என்பதில் கருத்து வேறுபாடு காட்டப்பட்டுளது. [In another passage the question of the enjoyments of the fruit of ones deed, either in the next world or in the next rebirth in this world is spoken of as a disputed point, page : 468] என்றும், “மறுபிறப்புக் கொள்கை பிறிதொரு பாட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது” The doctrine of rebirth mentioned in another page : 469] என்றும் கூறிவிட்டு முறையே,

“ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச் சென்று உணீஇயர்”

“செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனில், தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்: தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின் மாறிப் பிறப்பின்மையும் கூடும்.”

“இம்மை போலக்காட்டி, உம்மை... உடனுறைவு ஆக்குக உயர்ந்த பாலே”

என்ற புறநானூற்றுப் பாக்களை (174; 214, 238) எடுத்து காட்டியுள்ளார்.