பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/550

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

540

தமிழர் வரலாறு

(புறம் : 229) என்ற பெயரிலும், அருந்ததி, “வடவயின் விளங்கும் சிறுமீன்” (பெரும் : 303) என்ற பெயரிலும், மேஷராசி, “ஆடு” (பெரும் : 160) என்ற பெயரிலும், வால்நட்சத்திரம், “தூபம்” (புறம் :117) என்ற பெயரிலும் இடம் பெற்றுள்ளன.

இவற்றையெல்லாம் அரிதின் முயன்று தேடி எடுத்துக் காட்டியதன் மூலம், இவை இடப்பெற்ற சங்க இலக்கியங்களைக் கி. பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டிற்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் திருவாளர் அய்யங்கார்.

ஆனால், இந்த வான நூல் அறிவையும், கணி நூல் அறிவையும், தமிழர்கள், தம்முடைய காலத்திற்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே பெற்றுருந்தமையால், தம்முடைய இலக்கண நூலில், “மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன்” (தொ. பொ. : 74) அவ்வறிவு வரப்பெற்றாரை வாயார வாழ்த்தியும், “மறைந்த ஒழுக்கத்து ஒரையும், நாளும் துறந்த ஒழுக்கம் கிழவற்கு இல்லை” {தொ. பொ. : 133) எனக் களவுக்காலத்துக் காதலர்கள், நாளும் கிழமையும் பார்க்கத் தேவையில்லை என அவர்களுக்கு விதிவிலக்கும் வழங்கியுள்ளார் தொல்காப்பியர்.

உண்மை நிலை இதுவாகவும் , திருவாளர், அய்யங்கார் அவர்களுக்குச் சங்க இலக்கியங்களுக்கு, அத்துணைப் பழம் பெருமைதர மனம் வரவில்லை : அதனால், தொல்காப்பியர் “ஒரையை” அறிந்துள்ளார் என்பது உண்மை ; ஆனால், அந்த “ஒரை” தமிழுல் கி.பி. முதல் நூற்றாண்டிங்கு முன்னர் இடம் பெற்றிருக்க இயலாது. ஆகவே, தொல் காப்பியர் காலம் அதற்குப் பிற்பட்டதாதலே வேண்டும். ஆகவே, அவர் கூறும் இலக்கணங்களுக்கு இலக்கியங்களாகிய, சங்க இலக்கியங்களைக் கி.மு. நூற்றாண்டுகளுக்குக் கொண்டு செல்வது இயலாது எனக் கூறிமுடிக்கிறார். (Surely it will not be a modest estimate if we assume, that Orai, could not have got into Tamil, before the first century A. D. which must