பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/551

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணைப்பு

541

be the upper limit of the age of Tolkappiyar (Page: 216) என அவர் கூறியிருப்பது காண்க.

ஒரு பொருளுக்கு இலக்கணம் வகுக்கப்படுகிறது என்றால் அப்பொருள், அதன் இலக்கணம் வகுக்கப்படுவதற்கும் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே நிலைகொண்ட ஒன்றாக இருந்திருக்க வேண்டும் என்பது நியதி: தொல்காப்பியர் திரு. அய்யங்கார் கூற்றுப்படி, கி.பி. முதலாம் நூற்றாண்டினர்தான் எனக் கொண்டாலும், அவர் இலக்கணத்திற்கு இலக்கியமாகிய சங்கச் செய்யுட்கள், அவர் காலத்திற்குச் சில பல நூற்றாண்டுகளுக்கு முன்னவாதலே வேண்டும்; இதைத், திருவாளர் அய்யங்கார் அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளார். “தொல்காப்பியனார், தம்முடைய இலக்கண நூலுக்கு ஆதாரமாகக் கொண்ட மரபுவழிப் பாடல்களுக்கு முற்பட்டதான இயற்கைப் பாடல்களின் வளர்ச்சிப் பருவத்திற்கு ஐந்நூறு ஆண்டுகளை வகுப்பது, மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடு ஆகாது. இவ்வகையில் தமிழ் இலக்கியத்தின் பிற்பட்ட கால எல்லையாக, ஏறத்தாழ கி.மு.1000ஐ அடைகிறோம்.” [It will not be an exaggeratted estimate to ascribe a period of five centuries to the development of, what one might call, the natural poetry, which proceeded the conventional poetry, on which Tolkappiyana: based his grammar. We thus reach about 1000 B.C., as the latter limit of the birth of Tamil poetry, page: 71) என அவர் கூறியிருப்பது காண்க.

“ஒரை” என்ற சொல், கிரேக்க மொழியிலிருந்து வந்த சொல் என்பதை ஏற்றுக்கொள்வதானாலும், அதற்குக் கி. பி. முதல் நூற்றாண்டை வகுப்பதும், வரலாற்று நிகழ்ச்சிகள் படி ஏற்புடையதாகாது; கிரேக்க பெருவீரன் அலெக்ஸாண்டர், இந்தியா மீது படையெடுத்து வந்து சிந்து நதியைக் கடந்தது கி. மு. 326 பிப்ரவரியில் போரஸ் மன்னனோடு போரிட்டது சூலையில்: தன் நாடு திரும்பியது கி. மு. 325 அக்டோபரில் என்பது வரலாற்றுச்