பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

வரலாற்றை எழுதினார். அதில் சில செய்திகள் பிற்கால ஆய்வுகளால் மாற்றப்பட வேண்டியதிருந்தன. புலவர் கோவிந்தன் அவர்கள் அப்பணியைத் துணிந்து ஏற்றுக்கொண்டு மூலநூலை முழுவதும் குறைக்காது திரிக்காது மொழிபெயர்த்தபின், எத்தஎந்தச் செய்திகள் மறுக்கப்படவேண்டுமோ, அனைத்துக்கும் தக்க சான்றுகளைக் காட்டித் திறனாய்வு செய்துள்ளார்; எனவே, புதிய செய்திகள் முழுவதையும் கொண்ட புதிய வரலாறு என்று இந்நூலைக் கொள்ளலாம்.

கடும் உழைப்பினை மேற்கொண்ட புலவர் அவர்கட்கும், அவர்தம் மொழியாக்கத்தைக் கழக வழி வெளிக்கொணர ஒப்புதலளித்த அவர்தம் பேருள்ளத்திற்கும் கழகம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

மூலநூலை விடப் பிறமொழியாக்க நூல்கள் விரிந்தே இருக்கும். குறிப்பாக இந்நூலில் மொழிபெயர்ப்பாசிரியர் பல புதிய செய்திகளையும் சான்றுகளையும் ஆங்காங்கே சேர்க்க நேரிட்ட காரணத்தால் தமிழாக்க நூல் இருமடங்காகிவிட்டது. எனவே நூல் இருபகுதிகளாக வெளியிட வேண்டிய சூழல்.

தமிழக வரலாற்றில் தோய்வுடைய அறிஞர்கள், ஆய்வாளர்கள் வரலாற்று மாணவர்கள் தமிழ் அன்பர்கள் அனைவரும் இந்நூலை விரும்பி வரவேற்பரென்று துணிவுடன் எதிர்பார்க்கிறோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.