பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன்

53

 இல்லை. ஆகவே, அவருடைய கற்பனைகள் எல்லாம் காது. வழிச் செய்திகள் ஆகிவிடா. உரையாசிரியர், சிறந்த தமிழ்ப் புலவர், பொருள் விளங்காப் பகுதிகளுக்கு விளக்கம் அளிக்கும் தகுதி வாய்ந்தவர் ; அதில் ஐயம் இல்லை ; ஆனால், அதுவே, மேலே எடுத்தாண்டிருக்கும் எடுத்துக் காட்டின் அடைப்புகளுக்கிடையில் கூறப்பட்டிருக்கும் வாக்கியத்திலிருந்து பெறப்படுவது போல, அவர் காலத்திற்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதான, விவாதத்திற்குரிய நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் அளித்து உறுதி செய்யும் உரிமையை அவருக்கு வழங்கிவிடாது. சிலப்பதிகாரக் காப்பியத்தில், கரிகாலனைக் குறிப்பிடும் நேரிடைக் குறிப்பீடுகள் அனைத்தையும், கீழ்வரும் பகுதியில், திரு. கிருஷ்ணசாமி அய்யங்காா் குறி ப்பிட்டுள்ளார். 1) "முதற் காதையின் கடைசி நான்கு வரிகள், இமயத் துச்சியில், புலிச்சின்னத்தை நிறுவிய அரசனை வாழ்த்துகிறது. "இது, உண்மையன்று, ஒன்று, அரச சின்னத்தை (கல், செங்கல், மரம், இரும்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் செய்யப்பட்ட) கரிகாலன் நாட்டினான் எனப் புலவர் கூறவில்லை என்பது குறிப்பிடப்படல் கூடும். ஆண்டிருக்கும் சொல், "பொறித்து", வெட்டுதல் அல்லது செதுக்குதல், முதற்காதையின் கடைசி நான்கு வரிகள், "போர்க்களம் பலவற்றில் வெற்றி கண்ட, கொடிய வேற்படையுடைய செம்பியன் (அதாவது சோழ அரசன்,) ஒப்பற்ற தன் அரச ஆணை ஒன்றே, உலகெங்கும் நடைபெறப் பேரரசு செலுத்துவோனாக! இமயத்தின் இப்பகுதியில் பொறித்த புகழ் ஒளிமிக்க புலிச்சின்னம், இமயத்துப் பாென்முடிக்கு அப்பாலும், தன் ஆணையைச் செலுத்துமாக !’ எனக் கூறுகிறது. -

"இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை
உப்பாலைப் பொற்கோட்டு உழையதா, எப்பாலும்,
செருமிகு சினவேல் செம்பியன்,
ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே!"

-சிலம்பு : காதை:1, 65-66