பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காிகாலன்

55


அப்பகுதிக்குத் தேவையான பொருள் விரிவைத் தரும் வகையில், அதை விளக்கியுள்ளார். "உரையாசிரியர் கூறியது இதுதான்.

அடிக்குறிப்பு :

("விண்ணிலே சென்று பொரும், பெரிய புகழையுடைய இக்கரிகால் வளவன், புதுப்புனல் விழவு கொண்டாடும், தலைநாட் போலவே, இவ் விழாவின் இறுதிக்கண் புனலாடிடங்களும் வீறுபெறத் தோன்றா நிற்க".(சிலம்பு : காதை : 6 வரிகள் : 159-160. அடியார்க்கு நல்லார் உரை) அது நிகழ்ந்த காலத்தில் கரிகாலன் ஆண்டுகொண்டிருந்தான் எனக் கூறுவதற்குப்பதிலாக, இது, கரிகாலனுடைய புனலாட்டுவிழா, அப்பாட்டில் கூறப்படும் புனலாட்டு விழாவிற்குக் காலத்தால் முற்பட்டது என்ற பொருளையே உணர்த்துகிறது. 5)"குறிப்பு மொழிகளால் (மறைமுகமாக) உணர்த்துததைக் குறிப்பிடத் தேவை இல்லை : காதை", வரிகள் 95-8ல், அப்பாட்டுடைத் தலைவனைப் பற்றிய, ஐயத்திற்கிடமில்லாக் குறிப்பே உளது"’.

"அசைவில் ஊக்கத்து நசைபிறக்கு ஒழியப்
பகைவிலக் கியது.இப் பயங்கெழு மலையென
இமையவர் உறையும் சி ைமயப் பிடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையிற் பெயர் வோன்"

.

இவ்வரிகளை எடுத்தாண்டு மொழி பெயர்த்தும் உள்ளேன்: அது, இந்திரவிழா ஊர்வலத்தின் போது, பண்டொரு காலத்தில் கரிகாலனால் பெறப்பட்ட சில பொருட்களுக்குப் பலி தூவி விழா செய்யப்பட்டது என்று மட்டுமே குறிப்பிட்டு அப்பொருட்களை, அவன் கைக்கொண்டது. பாட்டு கூறும் நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு முற்பட்ட ஒரு காலத்தில் ஆகும் என்பதையே உறுதி செய்கிறது.