பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

தமிழா் வரலாறு

அடிக்குறிப்பு :

(புலவர் ஆண்டிருக்கும் உண்மையான "புண்ணிய திசை முகம் போகிய அந்நாள்" என்ற தொடர் அப்பாட்டு கூறும் நிகழ்ச்சிகளுக்கு மிக மிக முற்பட்ட காலத்தே வாழ்ந்த ஓர் அரசனாவன் அவன் என்ற பொருளை உணர்த்துகிறது).

6) "17 ஆம் காதையில் மூவேந்தர்களைப் பாராட்டும் பாக்களில், ஒரு பாட்டில் கரிகாலனின் இமய வெற்றி குறிப்பிடப்பட்டுளது. குறிப்பிடப்பட்ட அவன், கடைசிச் சோழனாவன்."

"பொன்னிமயக் கோட்டுப் புலி பொறித்து மண் ஆண்டான்
மன்னன் வளவன் மதிற் புகார் வாழ்வேந்தன்,

ஈண்டு கூறப்பட்ட அப்பாட்டின் பகுதி, கரிகாலன் பெயரை ஈற்றில் கொண்ட சோழ அரசர் பட்டியலைக் கொடுக்கவில்லை; அது, உள்வரி வாழ்த்து என்ற தலைப்பில் வரும் மூன்று பாக்களில், வறிதே இரண்டாவதாக இடம்பெற்ற ஒரு பாட்டு, இப்பாக்களில், இந்திரனுக்குரிய (ஒரு புராணக் கடவுள்) மாலையை அணிந்துகொண்ட பாண்டியன், இமயத்துப் பொன் முடியில் புலிச்சின்னம் பொறித்த சோழன், கடலிடையே நடப்பட்டிருந்த கடம்ப மரத்தை வெட்டி வீழ்த்திய சேரன், ஆகிய மூவரும், கடவுளாம் கிருஷ்ணனுக்கு ஒப்புடையவராகப் பாராட்டப் பெற்றுள்ளனர். செங்குட்டுவன் காலத்துக்கு முன் வாழ்ந்தவர்களாய, குறிப்பிடப்பட்ட அரசர்களின் மிகைப்படுத்தப்பட்ட பாராட்டினைக் கூறும், இச்சிறு பகுதி, எவ்வாறு, அவர்களை அச்செங்குட்டுவனின் சம காலத்தவராக ஆக்கும்? அது தாண்பது அறவே இயலாது. 7) “21ஆம் காதை, 11முதல் 15 வரையான வரிகள், கரிகாலன் மகள். அக்காலைச் சேர அரசனை மணந்திருந்தாள் எனத் தெளிவாக அறிவிக்கிறது.

"மன்னன் கரிகால் வளவன் மகள், வஞ்சிக்கோன்

தன்னைப் புனல் கொள்ளத் தான் புனலின் பின்சென்று