பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

தமிழா் வரலாறு

 என்பதை மறவாதவர் எவரும், ஐயப்பாட்டிற்குரிய அப்பாடபேதச் சொல்லுக்கு, அதைத் தென்னிந்திய வரலாற்றுக்கால வரிசைப் பட்டியலுக்கு உள்ள ஒரே ஒரு சான்றாக ஆக்குமளவு முக்கியத்துவம் அளிப்பதற்கு முன்னர், ஒரு முறைக்கு இரு முறை சிந்திக்கவே செய்வர்.

பழங்காலம் தருவதற்கு வேறுபலத் தடைகள் :

கரிகாலனுக்குப், கி. பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டை உரியதாக்குவது, வேறு காரணங்களாலும் மறுக்கப்படுகிறது. பெரிபுளூஸ் ஆசிரியரோ, அல்லது தாலமியோ, கரிகாலச் சோழப் பெருவேந்தனைவிடக் குறைந்த புகழே கொண்ட சிற்றசர்களையும் குறிப்பிடுகின்றனர் என்றாலும், கரிகாலனைக் குறிப்பிடவில்லை. அதற்கு மாறாகத், தாலமி அவர்களின் தமிழ்நாட்டுக்கு கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் நில இயல் ஏடு, அந்நாட்டின் படத்தைத், தமிழ் இலக்கியங்கள், கரிகாலனைப் பாராட்டி யிருப்பதுபோல், தமிழ் நாடு முழுவதும், ஒரு பேரரசின் ஒரு குடைக் கீழ்க் கொண்டுவரப்பட்டு இருந்தது போல் அல்லாமல், பற்பல சிற்றசர்களால் ஆளப்பட்டிருந்த நாடாகவே காட்டுகிறது. மேலும், பட்டினப்பாலையில் குறிப்பிட்டிருக்கும், தங்கள் தங்கள் கூடாரங்கள் மீது வாதிட்டழைக்கும் கொடிகளை ஏற்றி வைத்துக்கொண்டு வாதிடுவார் செயல், வாதமுறை நன்கு வளர்ந்த விட்ட ஒரு காலத்தையே, நிச்சயமாகக் சார்ந்ததாகும். இது, கி. பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னர், வடஇந்தியாவிலும், நிச்சயமாக இடம் பெறவில்லை.

கரிகாலனுடைய உண்மையான காலம் :

கல்வெட்டுச் சான்றுகள், கரிகாலன் சிறப்புற்றிருந்த காலமாகக், கி. பி. நான்காம் நூற்றாண்டைக் குறிப்பிடுகின்றன. அவன், காஞ்சியைப் பல்லவர்களிடமிருந்து கைப்பற்றி, அதைப் பொன்வேய்ந்தான். காஞ்சிப் பல்லவர் ஆட்சி, கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலும், அதற்கு