பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன்

61


முற்பட்ட காவத்திலும், மிகப் பெரும் வலிவோடு இருந்தது: சமுத்திரகுப்தனின் பிராஸஸ்தி குறிப்பிடும் விஷ்ணு கோபன், (ஒரு பல்லவப் பெயர் : தமிழ்ப் பெயர் அன்று) காஞ்சிக் காவலனாக இருந்த கி. பி. 350 வரை, அப்பேராற்றல் தொடர்ந்து இருந்து வந்தது. இக்கால கட்டத்தில், பாணாவாசிக் கதம்ப அரச இனத்தைத் தோற்றுவித்த, மயூரசர்மன், அரசுக்கு எதிராக எழுப்பிய கலகத்தால், அது: பலவீனப்பட்டது. ஆகவே, கரிகாலன், திரிநயன பல்லவனை வென்று, காஞ்சியை அடுத்த தெலுங்கு, மாநிலத்தில், தனக்குத் திறை செலுத்தும் சிற்றரசனாக, ஒரு சிறியன் நாட்டைக் காணத் துரத்தியது, நான்காம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்திருக்கக் கூடியதே தெலுங்குக் கல்வெட்டுக் ளும், தெலுங்கு இலக்கியங்களும் திரிநயனப் பல்லவன் குறித்துக் குறிப்பிடும் பல்வேறு குறிப்பீடுகளுக்கு, இது ஒன்றே. பொருந்தும் விளக்கமாகும். பிறிதொரு ஒருமைப்பாடும் இதை உறுதி செய்கிறது. கீழைச் சாளுக்கியக் கல்வெட்டுக்களில், அச்சாளுத்கிய குலத்தை ஆதிகாலத்தில் தோற்றுவித்தவன், தஷிண பரதத்தின் அரசனான திரிலோசனன் என்பவனால், அல்லது திரிலோசன பல்லவனால், ஒரு போரில். தோற்கடிக்கப்பட்டவனும், அயோத்தியாவிலிருந்து போர் மேற்கொண்டு வந்தவனுமாகிய, ஒரு விஜயாதித்தியன் ஆவன் எனக்கூறும் ஒரு பழங்கதையினைக் கொண்டுளது. இந்த விஜயாதித்தியன், கி. பி. ஏழாம் நூற்றாண்டில், பாதாமி அரசனான, இரண்டாம் புலிகேசிக்கு ஐந்து தலைமுறை. முன்னே தள்ளப்படுகிறான். இவ்வகையால், கரிகாலன், திரிவோசனன், விஜயாதித்தியன் ஆகிய மூவரும், பெரும் பாலும் ஒரு காலத்தவராகின்றனர். ஆகவே, கரிகாலன் சிறப்புற்றிருந்த காலம் பெரும்பாலும். நான்காம்