பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

தமிழர் வரலாறு

பர்வதத்துக்குக் கிழக்கில் குடி அமர்த்திய பிராமணர்களுக்கு நிலதானம் செய்ததாகும். (247 of 1897, S. 1092. Also 109-110 of 1893. S. 1057 and 779 1922) குண்டூர் மாவட்டத்து ஏழு சிற்றுார்களின் தானத்தை, ஒரு கல்வெட்டு கூறும்போது, 261 of 1897) பிறிதொரு கல்வெட்டு, மொத்தத்தில் எழுபது சிற்றுார்களைக் குறிப்பிடுகிறது. (M. E. R. 1908 P. 82-84. Also 880/1907 which curiously enough assigns a second Trilochana to S-723) பதின்மூறாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் அரசன். பழைய தானத்தின் உண்மையைப், பெரும்பாலும், எழுத்தாவணங்கள், அல்லது வாய்மொழி விசாரணை மூலம் அறிந்து, மன நிறைவு கொண்டபின்னர், திரிலோகன பல்லவனின் பாபட்லா வட்டத்து நிலதானம் ஒன்றை உறுதிப்படுத்துகிறான். (803 of 1922, 5.1131) அவன் பெயர், நன்றிமறவாப் பெருமக்களால், தங்கள் பின் தலைமுறையினர்க்குத் தொடர்ந்து கூறப்பட்டுவருமளவு, அவன் செய்த அறக்கொடைகள், எண்ணால் பெரியனவும், பலரும் அறிந்த பெருமையும் உடையவாம்.

திரிலோசனப் பல்லவன் எப்பொழுது வாழ்ந்தான் ? (See Ep, Ind. X P. 340 for Krishna Sastrie’s opinion). விமலாதித்தியனின் ரணஸ்த பூண்டித் தானமும் (S. 933, Ep. Ind. vi. P. 351; 111 P. 95, See also M.E.R. 1916 P. 136 and 1915 P. 393 Also Ep. Ind iv P. 239): ஏழாம் விஜயாதித்தியனின் பாமுலவாக்கச் செப்பேடுகளும் (Andhra Hist. Jour Rajamundry 111 P. 278) வீரச்சோழனின் செல்லுார் செப்பேடுகளும், அவனைச் சாளுக்கிய இனத்து முதல் அரசன், விஜயாதித்தியனின் காலத்தவனாக ஆ க் கு கி ன் ற ன. தக்கிணத்து அரசன், திரிலோசனன், தன் நாட்டின் மீது படையெடுத்து வந்த சாளுக்கியனை வென்று கொன்றான். அப்போது கருவுற்றிருந்த சாளுக்கிய மன்னன் மனைவி, முடிவெழு (பெத்த முடியம்)வைச் சேர்ந்து, விஷ்ணுவர்த்தனன் எனப்பெயரிடப் பட்டான். அவன் வயதுக்கு வந்ததும், அலன் தந்தை தோல்வி கண்டவிபத்தில் தன் அரசை நிறுவினான். இக்கதை திரிலோசனப் பல்லவன் காலத்தை.