பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன்

65


அறிய, நமக்கு, ஒரு குறிப்பினைத் தருகிறது. ஜம்மலமடுகு வட்டத்தில், பிறிதொரு கல்வெட்டில், திரிலோசனபுரம் என அழைக்கப்படுவதும், (350 of 1905) விஷ்ணு வர்த்தனின் பிறப்பிடமாகக் கூறப்படுவதுமாகிய, பெத்தமுடியன் என்ற, அச்சிற்றுாரில், கன்னட மொழிக் கல்வெட்டு ஒன்று உளது; (S. 1046, See, M. E. R. 1904.5. P. 32-42) வெண்ணுபட்டனை (விஷ்ணுபட்டனை) சாளுக்கிய அரசிக்கு அடைக்கலம் தந்த சோமயாஜியாக, வெளிப்படத் தெரிந்த திரிலோசனப் பல்லவனிடமிருந்து நிலதானம் பெற்றவனாகக் காட்டுவதும், பிற்காலத்தைச் சேர்ந்ததுமான பிறிதொரு கல்வெட்டும் உளது. (S :. I. iv P. 927).

விஜயாதித்தியனின் படையெடுப்பும், திரிலோசனனுடனான போரும், கோணக் கல்வெட்டொன்றில், கூறப்பட்டும் உளது. (5.1117) (Ep. Ind iv. P. 94, 239) விஜயாதித்தியன், கீழைச் சாளுக்கிய முதல் அரசன் விஷ்ணு வர்த்தனனிலிருந்து, ஐந்து தலை முறைக்கு அப்பால் தள்ளப்படுகிறான். ஆகவே, அக்கதையில் ஏதேனும் உண்மை இருக்குமாயின், திரிலோசனன், கி. பி ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். (El Ind. xi, P. 337 1899 ஆம் ஆண்டு 175 ஆம் எண் கல்வெட்டில், ருத்ரபட்ட அஹிச்சத்ரன் என்பான் ஒருவன், திரிலோசனனிடம் பெற்ற நிலதானத்தால் பயனடைந்ததாகக் கூ ற ப் ப ட் டு ள து. நிலதானம் பெற்றவன் குடும்பத்தில், பெரிய அரசகுலத்து உடன் பிறப்புக்களாம் சத்யாஸ்ரயன், விஷ்ணுவர்த்தனன் ஆகியோரால், அதுபோலவே நிலதானம் பெற்ற சூரியனும், குப்பனனும் பிறந்தனர். மேற்கூறிய குறிப்புகளிலிருந்து, திரிலோசனன், இரண்டாம் புலிகேசிக்கு முன்னர் வாழ்ந்தான் என்பது உறுதியாகிறது என்றாலும், ருத்ரனுக்கும், சூரியனுக்கும், இடையிலான தலைமுறைகளின் எண்ணிக்கை கொடுக்கப்படவில்லையாதலின், திரிலோசனின் சரியான காலத்தைக் கண்டறிவதில், நாம் இன்னமும் இருட்டிலேயே உள்ளோம். வெலநாடு ஆண்ட பிரித்வேஸ்வரனின், பித்தாபுரம் கல்வெட்டுக்களில் (5.1108) (Ep. Ind. P.

த.வ. II-5