பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன்

67


பெற்றிருக்கும் கதைகளில், திரிலோசனன், சோழர்க்குத் திறை செலுத்தும் சிற்றரசனாக, காவிரிக்குக் கரை அமைக்கும் பணியில், அச் சோழர்க்குத் துணை புரிய மறுத்தவனாகக் காட்டப்பட்டுள்ளான். சம காலத்தவனான சோழப் பேரரசன் கையில், தன் தனியாட்சி உரிமையை அண்மையில் இழந்து விட்டதனால், தன்பேரரசன் ஆணைக்கு அடிபணிய மறுக்கும் பெருமிதம் உடையவனாகி விட்டான் ; அடிபணியாமைக்குத், தென்னாட்டுச் சோழர் தலைநகரிலிருந்து அவனைப் பிரித்து வைக்கும், நெடுந்தொலைவு காரணமாதலும் கூடும். எவ்வாறாயிலும், கரிகாலன் அவனை விட்டுவைக்கவில்லை; தன்னுடைய சிற்றரசனை விரைவில் தன்தாள் பணியச் செய்துவிட்டான் என்பதில் ஆவணங்கள் ஒத்துள்ளன. இலக்கிய மொழியில், உருவகப்படுத்திக் கூறின், தேவைக்குமேல் இருந்ததான கண், கரிகாலனால் பிடுங்கப்பட்டது.

இக்கதைகளில் அடிப்படையில் அ மை ந் தி ரு க் கு ம் கருத்துக்களை நம்பி, திரிலோசனன் விஜயாதித்தியன், கரிகாலன் ஆகிய மூவரும் சம காலத்தவர் என்பதை நிலை நாட்டலாம்.