பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன் y T.

அவன், தம் காலத்துக்குச் சிறிதே முற்பட்டவனாகவே, அவனுடைய வாழ்க்கையொடு தொடர்பு கொண்ட அருஞ் செயல்கள், அவர் மனத்தில் பசுமையாகவே இருந்ததாலும், அச் செயல்கள் சிலவற்றை ஏற்புடைய இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு குறிப்பிடும் நிலையில், அவன் இயற்பெயர் கூறாது, சென்னி, செம்பியன், காவிரி நாடன், புலிக்கொடி உரவோன் என்பன போலும், சோழர் குலத்தவர் அனைவரையும் குறிக்கும் பொதுப் பெயர்களால் குறிப்பிட்டால், சிலப்பதிகாரத்தைப் பி. ற் கால த் .ே த படிப்பவர்க்கு, அச்செயல்களுக்கு உரியவன் கரிகால் பெரு வளத்தான் தான் என உறுதியாகக் கொள்வதற்கு மாறாக, சோழர் குலத்து வந்தவன் யாவனோ என ஐயுறவும் கூடும் என அஞ்சியதால், தாம் பாடிய சிலப்பதிகாரத்தில், சில பல இடங்களில் இவை போலும், பெயர்களை ஆண்டிருந்தாலும், மேலே கூறிய மூன்று இடங்களில் மட்டும், திருமாவளவன், கரிகால் வளவன் என்ற அவன் இயற்பெயர் கூறியே அறிமுகம் செய்துள்ளார்: -

  ஆக, கரிகாலன், வடநாட்டு வெற்றி, தன்னொத்த வயதுடையாரோடு சென்று கடலாடி மகிழ்தல், ஆதிமந்தி என்னும் அரிய புலவர் பெருமாட்டியை மகளாகப் பெற்றது. ஆகியவற்றைக் கூறியதன் மூலம், கரிகாலனைப் பற்றி முழுமையாக அறிந்திருப்பவர் இளங்கோவடிகளார் என்பது தெளிவாயிற்று.
  அங்ஙனமாக, மாதவியின் அரங்கேற்றம் கரிகாலன் அவையில் நடைபெற்றிருக்குமாயின், மாதவிக்கு ஆயிரத்தெண் கழஞ்சு பொன் பரிசு அளித்தது கரிகாலனே ஆயின், கரிகாலனை நன்கு அறிந்து வைத்திருக்கும் இளங்கோவடி, களார், அவ்வுண்மை தெளிவாகத் தெரியும் வகையில், அந்நிகழ்ச்சிகளில் கூறப்படுவோனைத், திருமாவளவன் என்றோ, கரிகால் வளவன் என்றோ, அவன் இயற்பெயர் கூறியே பாடியிருப்பர். “சூழ்கழல் மன்னன் என்றோ