பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன் 73

கொற்றமொடு மழைக்கரு உயிர்க்கும் அழல் நிகழ் அட்டின் மறையோர்" (142-144) என்ற தொடரில்வரும் "உழைப்புலிக் கொடித்தேர் உரவோன்" என்பதற்கும், அடைக்கலக்காதை, “வேந்துறு சிறப்பின் விழுச்சீர் எய்திய மாந்தளிர் மேனி மாதவி (21-22) என்ற தொடரில் வரும் வேந்து’ என்பதற்கும் கரிகாலன்’ எனப் பொருள் கொண்டுள்ளனர்:

 "உரைசால் சிறப்பின் அரைசு விழை திருவின் பரதர்” என, மனையறம் படுத்த காதையிலும், "அரைசர் பின்னோர்" என, அடைக் கலக்காதை (109) கொலைக் களக் காதையிலும் {44) வரும் தொடர்களில், வணிகர் குலத்தைக் குறிக்கும் போதெல்லாம், "வணிகர்"

என, அவர் குலப் பெயரிட்டுக் குறிப்பிடாமல், அரசகுலத்தவர்க்கு அடுத்து வைத்து மதிக்கத் தக்க இனத்தவர் என்ற அவர் குலப்பெருமை தோன்றக் குறிப்பிடுவதையே இனங்கோவடிகளார் மரபாகக் கொண்டு உள்ளார் என்பது தெளிவு. ஆகவே, "அரைசு விழை திருவின் பரதர்"என்ற தொடரில் வரும் "அரைசு" என்ற சொல்லோ,"அரைசர் பின்னோர்" என்ற தொடரில் வரும் "அரைசர்” என்ற சொல்லோ, பொதுவாக, அரசர் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ள சொல்லேயன்றி, குறிப்பிட்ட அரசன் ஒருவனைச் சுட்டிக் கூறப்பட்ட சொல் அன்று : மங்கல வாழ்த்துப் பாடலில் வரும். "பெருநிலம் முழுதாகும் பெருமகன் தலைவைத்த ஒரு தனிக்குடி" (31-32) என்ற தொடரின் நிலையும் அஃதே. பெரிய நாட்டை முழுமையாகத் தனியொருவனாக நின்று ஆளும் பேரரசனால், முதற்குடியாக வைத்து மதிக்கத் தக்க ஒப்பற்ற குடி’ எனும் பொருள் உடையதாய் வணிகரைக் குறிக்கும், அத்தொடரில் வரும் "பெருநிலம் முழுதாளம் பெருமகன்" என்ற தொடரும், ஒருபெரிய நாட்டை முழுமையாக ஆளும் ஒரு பேரரசன்