பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

‘76 தமிழர் வரலாறு

அரச வாழ்த்துப் பாடியவர்கள், அக்காலை அரசாண்டி ருந்தவன் செங்குட்டுவன் என்பதை அறிந்திருந்தும், அவன் பெயர் கூறி வாழ்த்தாமல், இமயத்தே வில் பொறித்தும் கொல்லிமலையாண்டும் மாண் புற்ற சேரர்குலக் காவலன் ஒருவனை, அச்சேரர் குலத்தவர்க்கு உரிய பொதுப்பெயராம், குடவர்கோ, என்ற பெயரோடு இணைத்து வாழ்த்தியிருப்பதும் காண்க.

 "ஆனா வைகலும் வாழியர்
 வில்லெழுதிய இமயத் தொடு
 கொல்லி ஆண்ட குடவர் கோவே"

-குன்றக் குரவை,

 ஆக, தத்தம் மண்ணுக்கு உரிய கடவுளர் குறித்த விழாக்களில், கடவுள் வாழ்த்தெல்லாம் முடிந்த பின்னர், தங்கள் மண் ஆளும் மன்னவனை வாழ்த்துவதையும் அவ்வாறு வாழ்த்துங்கால், அக்காலை ஆட்சிப் பொறுப்பில் இருப்போன் இயற்பெயர் கூறி வாழ்த்தாது, அவன் பிறந்த இனத்தவர்க்குரிய பொதுப் பெயர்களுள் யாதேனும் ஒன்றையே கூறி வாழ்த்துவதையும் மரபாகக் கொண்டுள்ளார், சிலப்பதிகார

ஆசிரியர் இளங்கோவடிகளார் என்பது தெளிவாகிறது.

  கண்ணகி மண நிகழ்ச்சியில், கணவன், மனைவியரை மங்கல நல்லமவி ஏற்றி மணவிழாவிற்கு நிறைவு கண்ட மகிழ்ச்சியில், நாட்டு மரபையொட்டி நாடாளும் மன்னனை வாழ்த்துங்கால், அக்காலை அரியணையில் இருந்த அரசன் இயற்பெயர் கூறி வாழ்த்தாமல், சோழர் குலத்தவர்க்கு உரிய பொதுப் பெயர்களுள் ஒன்றான "செம்பியன்"

எனும் பெயர் கூறி வாழ்த்தி இருப்பதும் மேலே கூறிய மரபுகளை ஒட்டியே தான், - -

"அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை மங்கல நல்லமளி ஏற்றினார் : தங்கிய இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை