பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 தமிழர் வரலாறு

அவனுக்குக் கரிகாலன் என்பதோடு, திருமாவளவன் என்ற பெயர் உண்மையையும் அறிந்தவர்: தென்னகத்தில் தன்னால் வெற்றி கொள்ளத்தக்க வேந்தர் யாரும் இல்லாமையால், போர் விரும்பி வடநாடு சென்ற காலை, இமயப் பெருமலை அவன் முயற்சிக்குத் தடையாக நிற்பது பொறாது, அதன்மீது, தன் புலிக்கொடி பொறித்து மீள்கையில், வச்சிர நாட்டுக்கோன் கொடுத்த பட்டி மண்டபம்; அவந்திவேந்தன் அளித்த தோரணவாயில், ஆகிய வற்றைப் பெற்றுக் கொணர்ந்து, புகார் நகரத்தில் அமைத்து, நகரை அழகு படுத்திய அருஞ்செயல்களை அறிந்தவர் (இந்திரவிழவூர் காதை : 89-104) என்பதும், அதேபோல், அரசிளங்குமரர், வணிகர்குலச் சிறார், ஆடல் பாடல் வல்ல இளமகளிர் சூழ்ந்துவரச் சென்று கடலாடி மகிழ்வதில் ஆர்வமுடையவன் கரிகாலன் என்பதையும் (கடலாடுகாதை : 155.160) அத்தகைய புனலாடல் விழா ஒன்றில், புதுப் புனலால் அடித்துச் செல்லப்பட்ட அவன் மருகன் ஆட்டனத்தியை, அவன் மகள் ஆதிமந்தி மீட்ட அருஞ் செயலையும் (வஞ்சினமாலை : 9.150) அறிந்தவர் என்பதும் தெளிவாக உறுதி செய்யப்ப்ட்டன, -

  கரிகாலனின் இவ்வரலாறுகளை அறிந்திருந்தமையால் தான், இளங்கோவடிகளாரால், அவற்றை எடுத்துக் கூறிப் பாராட்ட முடிந்தது; அவ்வாறு பாராட்டுங்கால், அச்செயல் களோடு தொடர்புடையவன், திருமாவளவன், கரிகாலன் என அவன் இயற்பெயரையே கூறவும் முடிந்தது.
  கரிகால் வளவனை, இத்துணைத் தெளிவாக உணர்ந்திருந்த இளங்கோவடிகளார், மாதவி அரங்கேறியது கரிகாலன் அரசவையில், மாதவிக்குத் தலைக்கோல் அளித்து ஆயிரத்தெண் கழஞ்சு பொன் பரிசு அளித்து விழுச் சிறப்புச் செய்தது கரிகாலன் என்பன உண்மையாயின், அவ்விடங்களில் முறையே "திருமாவளவனுக்கு அல்லது கரிகாலனுக்குக் காட்டல் வேண்டி" என்றும், "கரிகால்வளவன் பால் தலைக்கோல் எய்தி" என்றும், கரிகாலனால் விழுச்சீர்