பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கரிகாலன்

83

உரை பெறு கட்டுரை ஆனால், இது வாழத்துக் காதையில் கூறப்படவில்லை என்றெல்லாம் அவர் கூறுவது காண்க.

“In the Silappadigaram, it is said, that among others such

as the king of Malva, Kayavagu King of lanka, surrounded by the sea, attended the Sacrifice perfomed, by Senguttuvanin honour of Kannagi’s visible elevation to to the godhead, “The “urai peru Katturai” a prose prologue to the Epic, partilly Contradicts the adove statement and says, “Kayavagu Heard of the marvellous story of Kannagi and–––frequently celebrated the festival of Kannagi, This prologu also says that Perungillii, the Solan, built a temple to the chaste - goddess (Pattini Davi) at wraiyur, but the Epic does not refer to this” (History of the Tamils Page, 380)

வஞ்சியில், செங்குட்டுவன் எடுத்த விழாவிற்கு வந்திருந்தார், தங்கள் தங்கள் நாடுகளில் விழா எடுக்க வரங்கேட்டுப் பெற்றனர் என்றாலும், வந்திருந்த அவர் அனைவரும் விழா எடுத்தார் அல்லர். விழா எடுக்க வேண்டிய தேவைக்கு உள்ளானார் மட்டுமே விழா எடுத்தனர். அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னர், பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னர் ; குடகங்கொங்கர் , மாளுவ வேந்தர், கயவாகு, ஆகிய ஐவர் விழாவிற்கு வந்திருந்தவர் ; இவர்களுள், கொங்கர், கயவாகு ஆகிய இருவர் மட்டுமே தங்கள் நாட்டகத்தே விழா எடுத்தவர் என்கிறது உரைபெறுகட்டுரை

அது போலவே, மழைவளம் வேண்டித் தங்கள் தங்கள் நாட்டகத்தே, கண்ணகிக்கு விழா எடுத்தவர் அனைவரும் வஞ்சியில், செங்குட்டுவன் எடுத்த விழாவில் பங்கு கொண்டவர் அல்லர். கொற்கைக் காவலன் வெற்றி வேறு செழியன், கொங்கிளங்கோசர், கயவாகு, சோழன் பெரும் கிள்ளி, ஆகிய இந்நால்வரும், கண்ணகிக்கு விழா எடுத்தன எனக் கூறுகிறது உரை பெறு கட்டுரை. இந்நால்வருள் கோசரும், கயவாகுவும் மட்டுமே, வஞ்சி விழாவிற்கு வருகை