பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

தமிழர் வாழ்வு


என்று தமிழ் மொழியிலே பல கட்டுரைகள் எழுதி உரை யிலே, பாட்டிலே விளக்கமாக வைத்துள்ளனர். புரட்சிப் பாவலர், அறிவியல் பாவலர் என்று மலர்கள் உள்ளன, இலண்டன் வானொலி நிலையத்தில் உள்ளவரும் தமிழர் தான். அங்கே தமிழ் ஒலி பரப்பப்பெறுகின்றது.

இலண்டன் பள்ளிக் கூடங்களில் தமிழ் கிடையாது. ஆனால் பல்கலைக் கழகத்தில் தமிழ் உண்டு. அங்குப் பள்ளிகளில் தமிழ் இல்லாததால் வாரந்தோறும் சனிக் கிழமையன்று தமிழ் மாணவர்களுக்கு ஓர் ஆங்கிலப் பள்ளியில் இடம் ஒதுக்கித் தமிழ் கற்றுக் கொடுக்கின்றனர். அங்குக் கற்றுத் தருபவர்களுக்கு அரசே நல்ல மானியம் கொடுக்கிறது. வருடத்திற்கு 14,000 பவுண்டு. இலண்டனில் பெரும்பாலான தமிழர்கள் சொந்த வீட்டிலிருக்கிறார்கள். அதற்கு அரசாங்கமே அவர்களுக்கு வழி செய்து தருகிறது. அங்கு எல்லாவிதமான வாழ்க்கை வசதிகளும் இருப்பதனால், சிங்கப்பூரிலிருந்து, அது விடுதலை பெற்றபோது, 2,000 பேர் – குறிப்பாகத் தமிழர்கள் – இலண்டனுக்குக் குடியேறியுள்ளனர்.

இலண்டன் நூல்நிலையத்தில் நிறையத் தமிழ் நூல்கள் உள்ளன. அதனைக் காட்டிலும், பொருட்காட்சியில் நமது பழங்காலத் தொல்பொருள் ஆய்வுகள், தமிழகத்தில் எழுதப் பெற்ற ஓலைச்சுவடிகள் எல்லாம் உள்ளன. தமிழகத்தில், வெள்ளத்தில் ஏடுகளை விடுகிறோம். அங்கு அவர்கள் நல்ல முறையில் அவற்றைப் பாதுகாத்து வருகின்றனர். அந்த அளவுக்குத் தமிழ்நாட்டில்கூடப் பழங்கால ஓலைச்சுவடிகள் கிடையா. இதைவிட, நியூயார்க்கில் மிக அதிகமான ஓலைச் சுவடிகளையெல்லாம் நன்றாகவே பாதுகாத்துவருகின்றனர்.

சிலவற்றின் பெயர்களையெல்லாம் நான் படித்துப் பார்த்தேன். ஒருவேளை இவை நான் பார்க்காதவையாக இருந்திருக்கும்! ஒரு சில எனக்குப் புதியனவாகத் தென்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/100&oldid=1358353" இலிருந்து மீள்விக்கப்பட்டது