பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

தமிழர் வாழ்வு


சிறப்பையும் வெற்றியையும் மாற்றாருக்குக் காட்டி, அவர்கள் அடி பணியாவிடின் உய்வில்லை என்பதை ஔவையார் தம் புறப்பாட்டால் நன்கு விளக்குகிறார். இதோ அவர் வாக்கு.

போர்க்கு உரைஇப் புகன்று கழித்தவாள்
உடன்றவவர் காப்புடை மதில் அழித்தலின்
ஊனுற மூழ்கி உருவிழந் தனவே;
வேலே குறும்படைந்த அரண்கடந்தவர்
நறுங்கள்ளின் நாடு நைத்தலின்

சுரைதழீஇய இருங்காழொடு
மடைகலங்கி நிலைதிரிந்தனவே;
களிறே, எழுஉத் தாங்கிய கதவம் மலைத்தவர்
குழுக் களிற்றின் குறும்பு டைத்தலின்
பரூஉப் பிணிய தொடி கழிந்தனவே;

மாவே, பரந்தொருங்கு மலைந்த மறவர்
பொலம் பைந்தார் கெடப் பரிதலின்
களன்உழங் தசைஇய மறுக்குளம் பினவே;
அவன்தானும், நிலந்திரைக்கும் கடல்தானை
பொலன் தும்பைக் கழல் பாண்டில்

கணைபொருத துளைத்தோ லன்னே!
ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது தடந்தாள்
பிணிக்கதிர் நெல்லின் செம்மல் மூதூர்
நுமக்குரித் தாகல் வேண்டின் சென்றவற்கு
இறுக்கல் வேண்டும் திறையே; மறுப்பின்

ஒல்வா னல்லன் வெல்போரான் எனச்
சொல்லவுங் தேறீராயின், மெல்லியல்
கழற்கனி வகுத்த துணைச்சில் ஓதி
குறுந்தொடி மகளிர் தோள் விடல்
இறும்பூ தன்றஃ தறிந்தா டுமினே !”

(புறம் 97)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/118&oldid=1358629" இலிருந்து மீள்விக்கப்பட்டது