பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

தமிழர் வாழ்வு


நிலையில் உள்ளதையே உணர்த்துவதாகும். அன்றி முன் அறியாமையைப் பற்றி வியத்தல் இரண்டிடத்தும் பொருள் சிறவாததாகும். எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டு காணுதல் ஏற்புடைத்தாகும் என எண்ணுகிறேன்.

ஆரம்பப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் பயிலும் ஒருவன் – தான் சட்டாம்பிள்ளையாய் – மாணவர் தலைவனாய் இருக்கும்போது அங்குள்ளவர்களில் தானே மெத்தப் படி த் த வ ன்-உயர்ந்தவன் என்ற தருக்கினைக் கொள்வான். ஆனால் அடுத்து அவன் உயர்நிலைப் பள்ளியில் கால்வைத்து ஆறாம் வகுப்புப் பயிலத்தொடங்கி அறிவு வளரப்பெறும்போது தன்னை மேலே நிற்கின்ற பல மாணவர்களோடு ஒப்பிட்டு எண்ணித் தன் அறியாமைக்கு நானுவான். அப்படியே அவன் பத்தாம் வகுப்போ பன்னிரண்டாம் வகுப்போ படிக்கும்போது – மாணவர் தலைவனாக நிற்கும்போது – தானே உயர்ந்தவன் என மறுபடியும் தருக்குக்கு உள்ளாவன். ஆனால் மறுபடியும் அவன் கல்லூரியில் கால்வைத்து முதல் படியில்முதல் வகுப்பில் பயிலும்போது மேலே அங்குள்ள பல்வேறு வகை கல்விப் பிரிவுகளையும் அவற்றில் பயிலும் மேல் வகுப்பு மாணவர்களையும் காணும்போது, இன்னும் தான் அறிவு எல்லையைத் தொடக்கூட இயலாது நிற்கின்ற நிலையினையும் அதன் விரிந்த எல்லையினையும் வியந்து வியந்து போற்றுவான். எனவே அறிவு, அறியா நிலையில். அது விரிந்து செல்வதைக் காண இயலும்.

உலகில் கண்ணுக்குத் தெரியும் பொருள்களைக் காணும்போது, காண முடியாததைத் தன் கூரிய கண்ணால் கண்டு ஒருவன் தான் மிக அறிந்தவனாக நினைக்கிறான். அதே வேளையில் தன் கண்ணுக்கு எட்டாத தொலைதுார உணர்வினால் அறிவு விரிந்தது. எனவும் உணர்கிறான். அவனுக்கு ஒரு சிறுதொலைநோக்கி இடைத்தால் முன் தான் கண்டதைவிட அதிகமாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/80&oldid=1356855" இலிருந்து மீள்விக்கப்பட்டது