பக்கம்:தமிழர் வீரம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தமிழர் வீரம் தாழ்ந்தான் தமிழன் வளமார்ந்த வட நாட்டை வந்தவர்க்குத் தந்தான், தென்னாட்டில் அமைந்து வாழ்வானாயினான். அந் நிலையில் எழுந்தது, "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்" என்ற வாசகம், இமயப் படையெடுப்பு ஆயினும், இமயமலை தன் மலை என்பதைத் தமிழன் மறந்தானல்லன். படையூற்றம் உடைய தமிழ் மன்னர் பலர் வடநாட்டின்மீது படையெடுத்தனர்; வீரம் விளைத்தனர். வெற்றி பெற்றனர். சேர சோழ பாண்டியர் ஆகிய தமிழ் வேந்தர் மூவர்க்கும் அப்பெருமையிலே பங்குண்டு. விற்கொடி யேற்றம் சேரகுல மன்னருள் சாலப் பெருமை வாய்ந்தவன் நெடுஞ் சேரலாதன். அவன் இமயமலை வரையும் படையெடுத்துச் சென்றான்; எதிர்த்த ஆரிய மன்னரை அலற அடித்தான்; சிறை பிடித்தான். இமயமலையில் தனது வில்லுக்கொடியை ஏற்றி, "இமய வரம்பன்' என்னும் விருதுப் பெயர் கொண்டான். அவன் புகழைப் பாடினார் பொய்யறியாப் பரணர்: புலிக்கொடி யேற்றம் பழங்காலச் சோழர் குலப் பெருமையெல்லாம் தன் பெருமையாக்கிக் கொண்டவன் கரிகால் சோழன் என்னும் திருமாவளவன். அடலேறு போன்ற அவ்வீரன் வடநாட்டின்மேற் படையெடுத்தான்; தடுப்பார் எவருமின்றி, இமயமலையை அடுத்தான்; விண்ணளாவிய அம் மலையை அண்ணாந்து நோக்கினான்; தன் வேகம் தடுத்தாண்ட அவ் 1. "ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசை தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து வெஞ்சின வேந்தரைப் பணித்தோன்" என்பது அவர் பாட்டு - அகநானூறு, 396,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/10&oldid=868372" இலிருந்து மீள்விக்கப்பட்டது