பக்கம்:தமிழர் வீரம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர விருதுகள் 99 கொண்டான். கீர்த்தி வாய்ந்த அச் சேனாதிபதிக்குப் பஞ்சவன் மாராயன் என்ற பட்டம் வழங்கினான், வீர மன்னனாகிய இராஜராஜன், அவனை வேங்கை நாட்டுக்கும் கங்க நாட்டுக்கும் மகா தண்ட நாயகனாக நியமித்தான். மாராயம் என்னும் பெயருடைய ஊர்கள் தமிழகத்தில் உண்டு: o தளவாய் அரியநாதர் அரியநாதர் பேராண்மை வாய்ந்த படைத் தலைவருக்குத் தளவாய் என்ற பட்டமும் அளித்தனர் பெருவேந்தர். தமிழ் நாட்டில் நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே அப் பட்டம் பெற்று விளங்கியவர் அரியநாதர். காஞ்சி மாதகர்க்கு அருகேயுள்ள மெய்ப்பேடு என்னும் சிற்றுாரில் ஒர் எளிய வேளாண் குடியிற் பிறந்தவர் அவர் வாழ்தல் வேண்டி வடக்கே சென்றார் தளவாய்ப் பட்டம் அந் நாளில் துங்கபத்திரை யாற்றங்கரையில் விஜயநகரப் பேரரசு தலைசிறந்து விளங்கிற்று. அத் திருநகரில் கிருஷ்ண தேவராயர் அரசு வீற்றிருந்தார். மதிநலம் வாய்ந்த அரியநாதர் அவர் அன்புக்கும் ஆதரவுக்கும் உரியராயினார்; படைக்கலப் பயிற்சி பெற்றார்: வட நாட்டினின்றும் போந்த பேர் பெற்ற மல்லன் ஒருவனை மற்போரில் வென்று மன்னன் மனத்தை மகிழ்வித்தார்; கணிதப் புலமையால் அவன் உள்ளம் கவர்ந்தார்; போர்க் களங்களில் கண்ணுங் கருத்துமாய் நின்று வெற்றி மேல் வெற்றி பெற்றார்; மன்னன் மனம் உவந்து அவர்க்குத் தளவாய்ப் பட்டமும் வரிசையும் அளித்தான். 6. முதல் இராஜராஜசோழன் (உலகநாத பிள்ளை). Լյ. 30. 7. கீழ் மாராயம் என்னும் ஊர் தஞ்சை நாட்டுக்' கும்பகோண வட்டத்தில் உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/101&oldid=868376" இலிருந்து மீள்விக்கப்பட்டது